நாள் தோறும் சிவனின் நினைவில் சிவன் தாமரைத் திருவடிக்கு – சில வரிப் பாமாலை

பாமாலை: 1 

வினையறுக்கும் வித்தகனே

 தொழ வரும் எனை தொடரும்

என் வினை தனை என் சொல்ல

வினையினை வித்திடும் சமயம்

வேதியனே தடுத்தாட் கொள்ள

தடையேது கண்டாய் இனியவனே

விடையேறி இக் கணமே வாராய் 

ஈசனே எமையாளும் தில்லை

நடராஜனே சிவகாமி நேசனே

பாமாலை 2: 

 பிறவியறுக்கும் வழி அறிந்தும்

போற்றி உனை தொழுதிலேன்

புல்லார் பலர் தம் சொல் கேட்டே

செல்லா வழிச் சென்று வீழ்ந்தேன்

பொல்லா வழியில் பொருளீட்டிய

புலையேனேன் எனக்கு சிவபதம்

அளிக்க வாராயோ சிதம்பரனே

ஈசனே எமையாளும் தில்லை

நடராஜனே சிவகாமி நேசனே


பாமாலை 3

வையத்தில் வாழுங்கால் உனை

வாயினால் பாடி வாழ்த்திலேன்

கண்ணால் நின் பொன்னுருவம்

கண்டும் கருத்தில் நிருத்திலேன்

ஐங்கருவியும் ஒடுங்கும் நேரம்

ஐய்யனே உனை நினைக்கிலேன் காலனின் காலடி ஓசை கேட்டு இக்

கணம் எனைக் காப்பது எவரோ


பாமாலை 4

மாலயனும் அறியா வொட்டா

மாதொரு பாகன் உனை யறிய 

மாதவமியற்றியும் பயனேது

மனமதை செம்மையாக்கி நின்

மலரடியில் பதித்து சித்தத்தை

மலராக்கி அர்ச்சித்து வழிபட 

மனமிரங்கி நீ  எனக்கருளாயோ


பாமாலை 5

கடலைக் குடைந்து கண்டதும்

வானைத் துழைத்துக் கண்டதும்

மலைமுகட்டை எட்டி நின்றதும்

காற்றைப் பைய்யில் அடைத்தும்

கண்ட பலன் யாது மில்லை இங்கு

காலனின் கணக்கறிவதரிதென

காலனுக்கு காலனே சிவனே

கழலிணையைக் காட்டியருளும்

கருணைக்கு ஈடில்லையே இங்கு

ஈசனே எமையாளும் தில்லை

நடராஜனே சிவகாமி நேசனே


பாமாலை 6

 விண்ணுலகம் போற்றும்

எண்குண முடையோய் நீ

மண்ணுலக மாய உலகில்

எண்ணில்லா பிறவி யெடுத்து

வண் செயலே புரிந்தேனை

கண் திறந்து காவாய் ஐய்யனே

ஈசனே எமையாளும் தில்லை

நடராஜனே சிவகாமி நேசனே


பாமாலை 7

 இழி நிறை வாழ்விலுனை தொழாது

பழிச் செயலாற்றி கூடா நட்புடன் கூடி

பாழ் நரக வாழ்வு வாழும் எனக்கு

ஊழ் வினையறுத்து உனை வழிபட வழியினை இனியேனும் அருளாயோ 

ஈசனே எமையாளும் தில்லை 

நடராஜனே சிவகாமி நேசனே 


பாமாலை 8

அறிவிற்கு எட்டா அரு மருந்தே 

ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய்

ஐந்தொழில் புரியும் ஆதியனே

உவமைக்கு ஒப்பாத மாமணியே

உள்ளும் புறமும் விளங்கும் சுடரே

பழைமைக்கும் பழைமையான

புதுமைக்கும் புதுமையனே எம்

ஈசனே எமையாழும் தில்லை

நடராஜனே சிவகாமி நேசனே

பாமாலை 9

 பொருளே பெரிதென எண்ணி

பல வழியே சென்றலைந்து வினை

தனை சேர்த்து மாய உலகில் சிக்கி

தொடரும் பிறவிப் பிணியில் வாடும்

ஏழையேனை அடியவரோடு கூட்டி

உனை நாடும் வழிதனை நல்காயோ

சித்தத்தில் நின்றாடும் சித்சபேசனே

ஈசனே எமையாளும் தில்லை

நடராஜனே சிவகாமி நேசனே


பாமாலை 10

 விரும்பித் தேடிய பொருள் யாவும்

வீண்னென அறிந்தும் விட்டிலேன்

வீடே பெரிதென வாழ்ந்த அடியார்

விண்ட சொல்லும் கேட்டிலேன் 

வேண்டத் தக்கதுனையென

விரும்பி உனதடி சேர்ந்தேன்

வித்தகனே எனக்கு உகந்ததை நீ

விரும்பித் தந்தருளுக வேதியனே 

ஈசனே எமையாளும் தில்லை

நடராஜனே சிவகாமி நேசனே   


பாமாலை 11

 கொஞ்சமும்  நினைக்கிலேன்

துஞ்சிய காலம் கணக்கறியேன்

நெஞ்சமும் பதற நின்னடியே

தஞ்சமென வந்தடைந்த எனை

பஞ்ச பூதங்களின் தலைவனே

அஞ்சேலென அபயம் அளித்து

வஞ்சகர் கூட்டத்தின் வினைதனை யறுப்பாய்


பாமாலை 12

 அஞ்ஞானம் இருளில் ஆழ்ந்து

அந்தகனாய் திரியும் எமக்கு

உன் பதத்தினைக் காட்டியருளி

நினைக் காண வந்தனை இங்கு

விண்ணகம் போற்றும் தேவனே!

கண்ணுக்கினியானே மனம்

கசிந்து நெக்குருகி உனைப் பாட

அருளாயோ ஆனந்த ஆடலரசே

ஈசனே எமையாளும் தில்லை

நடராஜனே சிவகாமி நேசனே


பாமாலை 13

 ஐம்புலனுக்கே ஆனேன் அடிமை

ஆரா அமுதே உனைத் தொழாது

வாழ் நாளும் வீணே ஆனதே பாழ்

நற்சுவையே யறியுமென் நாவும் 

நற்றவா உனைப் புகழாதிருக்க

நமன் வரும் காலம் ஏது செய்வேன்

கடையனேனைக் காத்தருளுவாய் 

ஈசனை எமையாளும் தில்லை

நடராஜனே சிவகாமி நேசனே

 

பாமாலை 14

 கொஞ்சமும்  நினைக்கிலேன்

துஞ்சிய காலம் கணக்கறியேன்

நெஞ்சமும் பதற நின்னடியே

தஞ்சமென வந்தடைந்த எனை

பஞ்ச பூதங்களின் தலைவனே

அஞ்சேலென அபயம் அளித்து

வஞ்சகர் கூட்டிணை யறுப்பாய்

ஈசனே எமையாளும் தில்லை

நடராஜனே சிவகாமி நேசனே


பாமாலை 15

 மலைமுகட்டை எட்டி நின்றதும்

காற்றைப் பைய்யில் அடைத்தும்

கண்ட பலன் யாது மில்லை இங்கு

காலனின் கணக்கறிவதரிதென

காலனுக்கு காலனான சிவனேயுன்

கழலிணையைக் காட்டியருளும்

கருணைக்கு ஈடில்லையே இங்கு

ஈசனே எமையாளும் தில்லை

நடராஜனே சிவகாமி நேசனே

பாமாலை 16

 ஓடி ஓடி உலகில் நிதமுழன்று

வாடி நிற்கும் சீவனை ஆட்கொள்ள

ஆடல் புரியுமுனை தேவாரமதைப்

பாடி பரவசமாகி தொழுதடியாரின்

அடி தொழுது அவரின் பக்திப்

பாடலைப் பாட இம்மார்கழியில்

நாடி வந்த யெமக்கு அருளாயோ

ஈசனே எமையாளும் தில்லை

நடராஜனே சிவகாமி நேசனே

பாமாலை 17

 மாலயனும் அறிய வொட்டா

மாதொரு பாகனுனை யறிய 

மாதவமியற்றியும் பயனேது

மனதை செம்மையாக்கியுன் 

மலரடியில் என்  சித்தத்தை

மலராக்கி அர்ச்சித்து வழிபட 

மனமிரங்கி அருளாயோ 

ஈசனே எமையாளும் தில்லை

நடராஜனே சிவகாமி நேசனே

பாமாலை 18

அண்ட சராசர முள்ளும் ஆடி

பிண்டத்தினுள்ளும் ஆடும் நீல

கண்டனே! நின்னைக் கண்டு

முண்டமாலினியும் ஆடி மகழ

சண்ட மாருதமும் மணம் வீச

சண்டி கேசரும் கணபதியும் 

கண்டு  வியப்பில் நின்றதை

விண்டு பகிர சொல்லுமில்லை

பண்டைய நான்மறை போற்றும் 

அண்ணலே! உயிர் உய்ய ஆடும்

ஈசனே எம்முள்ளும் ஆடும் தில்லை

நடராஜனே சிவகாமி நேசனே

பாமாலை 19

ஏலக்குழலி மணவாள எமக்கு

சாலப் பரிந்து விண்ணிறங்கி

கோலமாம் நடனம் புரிந்திங்கு

மாலனும் அயனும் வியக்க 

ஞாலமே புகழும் வண்ணம்

காலனை வெல்லும் வழியினை 

அறிவிக்க வந்தனை ஐய்யனே!

என்னே உனக்கெவர் ஈடிங்கு 

ஈசனே எமையாளும் தில்லை

நடராஜனே சிவகாமி நேசனே

பாமாலை 20

 தீயோரின் தீ வினைதனை 

அறுத்து ஆண்டருள் புரியும் 

அண்ணலே பொல்லா வினை

புரிந்து போக்கிட மற்றேனுக்குப்

பரிந்து என் ஊழ்வினையைப்

போக்கி எல்லையற்ற ஆனந்தம்

அருளியுன் பதத்தினிலிருத்தி

வைத்தருளே அம்மை அப்பனே

ஈசனே எமையாளும்  தில்லை 

நடராஜனே சிவகாமி நேசனே


பாமாலை 21

 பிறவி தோறும் பின் தொடர்ந்து நான் செய்யும்

தொல்வினை யறுத்து

தொழும் விதிதனை அறிவிக்க

தொண்டர்களையும் தோன்ற வைத்தும்

நின்னை உணராது

அடியவரைத் தொழாது அவர் மெய்யுரை கேளாது மனத்தின் வழியே சென்று காணும் காட்சிதனை

மெய்யெனக் கருதி பெய் பல பேசி வினை பல செய்து

பாழ் நரகக் குழிக்கு அழுந்த 

கயவருடன் கூடி  செய்யாத வினைகள் பல செய்து

திரியுமெக்கு அன்புடன்

காக்கும் வழிதனை யறிய 

தவமியற்றவோ அமர்ந்தாய் பனி மலை கயிலைதனிலே

என்னே நின் கருணை 

ஈசனே எமையாளும் தில்லை நடராஜனே சிவகாமி நேசனே!

பாமாலை 22

 தான் தானென உதிக்குமிடம்

தனை நானறிவேனில்லை 

தென்திசை யமர்ந்து போதிக்கும்

தயாபரனே! ஆத்ம ஞான குருவே!

உத்தம சீடனில்லையென எண்ணி

உதறித் தள்ளுவது உனக்கழகோ 

உனையன்றி யெனக்கருள யாரே

உளரிங்கு உமையொருபாகா!

அம்மையும் அப்பனுமாகி வந்து 

அருள் புரிவாய் அம்பலவாணனே!

ஈசனே! எமையாளும் தில்லை 

நடராஜனே! சிவகாமி நேசனே!

பாமாலை 23

 எண்ணம் உதயா நிலை

என்று வருமோ அறியேன்!

உதிக்கும் எண்ணம் யாவும்

உன் கழலிணையடியின்

பெருமைதனை நினைந்து

உருகி பரவசமாகப் பேசியே

மோன நிலையில் அமிழ்ந்து

உன்மத்தமாய் உலகில் உலவும்

நிலையில் உள்ளும் புறமும்

ஒன்றாய்த் திகழ்ந்து திரிந்து

தீக்குரளும் சென்று ஓதாதுன்

பெருமைதனை நிதம் பேச

அருளுகவே சிற்றம்பலனே

ஈசனே எமையாளும் தில்லை

நடராஜனே சிவகாமி நேசனே

பாமாலை 24

 கண்ணெதிரே கற்பூரமாய்

கரையும் வாழ்வைக் கண்டும்

கலங்க வில்லை என் மனம்

காலத்தை வீணே போக்கி

திரியு மென் கதியறியேன்

தேன் பொதிந்த மலர் சூடிய

சிவ பெருமானே உன்னை

சிந்தையில் கொண்டு தொழ

அருளாயோ அருள் மலையே

ஈசனே எமையாளும் தில்லை

நடராஜனே சிவகாமி நேசனே


பாமாலை 25


 அஞ்ஞானம் இருளில் ஆழ்ந்து

அந்தகனாய் திரியும் எமக்கு

உன் பதத்தினைக் காட்டியருளி

நினைக் காண வந்தனை இங்கு

விண்ணகம் போற்றும் தேவனே!

கண்ணுக்கினியானே மனம்

கசிந்து நெக்குருகி உனைப் பாட

அருளாயோ ஆனந்த ஆடலரசே

ஈசனே எமையாளும் தில்லை

நடராஜனே சிவகாமி நேசனே


பாமாலை 26

 அயனும் மாலனு மறியானை

அண்ட சராசரம் நிறைந்தோனை 

விண் மண் ஏகமாகி நின்றானை 

எங்கள் அண்ணா மலையானை

செஞ்சடை செந்தழல் மேனியனை

துஞ்சா தடியார் தொழுவோனை

பஞ்ச பூதங்களைப் பூண்டோனை 

அஞ்செழுத்தைக் கொண்டோனை

நெஞ்சில் பதித்து தொழுங்கால்

தொலையும் தொல்வினையுமே 

பாமாலை 27

அருளேவே ஆனந்தமே

தெள்ளத் தெளிவே தேனே 

தென்திசை தெய்வமே

உனையன்றி யாரே உளர் 

உலகம்மை உவக்கும் தேவே

ஓர் உயிர் முதலாய் எமைக்

காத்தருளும் வள்ளலே 

நின் கழலன்றி ஏதுமறியேனே 

ஈசனே எமையாழும் தில்லை  

நடராஜனே சிவகாமி நேசனே

பாமாலை 28

 அன்புக்கு அகப்படும் அண்ணலே

என்புக்கூட்டினுள் அகப்பட்டேனை

துன்ப வாழ்விலுனுள் மூழாது நின்

இன்பமே யருளும் திருவடிதனில் 

இருத்தி அஞ்செழுத்தினை எனது

கருத்தினில் நிறுத்த அருளாயோ

ஈசனே எம்முள்ளே நின்றாடும் நடராஜனே  சிவகாமி நேசனே

பாமாலை 29

 விண்ணளவு நிற்கும் அண்ணலே

மண்ணிலே பிறந்து உனை யறியா

வொட்டா தொடரும் வினைதனை

வேரறறுத்து தொண்டர் குழாத்துடன்

கூட்டுவிப்பாய்  அம்பலம் கூத்தனே

கொடிதினும் கொடிய விடமதனை  

மிடற்றினில் வைத்து பல்லுயிர்

காத்த நீலகண்ட தியாகைய்யனே

ஆற்றும் வினையாவும் உனதாக

அருளி ஆணவம றுப்பாய்யனே

ஈசனே எம்முள்ளே நின்றாடும்

நடராஜனே சிவகாமி  நேசனே

பாமாலை 30

 மண்ணிலே வந் தெழுந்தருளும்

தண்மதி சூடிய  தயாபரனே

வெண்பனி மலை வாழ் ஈசனே

பண்ணியற்றி உனைப் பாடாது

வீணே காலத்தைக் கழித்தயெமை

கண் திறந்து காத்தருளாயோ

பெண் சுமந்த பித்தனே ஐய்யனே

ஈசனே எமையாழும் தில்லை

நடராஜனே சிவகாமி நேசனே!

பாமாலை 31

பக்தர்கள் குழாம் தவிர்த்து

எத்தர்கள் குழாத்துடன் கூடி

அத்தனா னந்தனைப் பாடாது

சித்தம் நிறை சிவனை மறந்து

பித்தரைப் போல் திரியுமெனை

முத்தன்ன வெண் நகையோனே

தித்திக்கும் திருவாசகமும் பாட

பத்துடை ஈசனே எனக்கருள்வாய் 

ஈசனே எமையாளும் தில்லை

நடராஜனே சிவகாமி நேசனே

பாமாலை 32

 உணர்வோருக்கு உணர்வாகி

உணவு ஏற்போருக்கு உணவாகி

கற்போருக்கு கல்வி பலவாகி

காற்றாகி கனலாகி வானாகி

வெளியாகி விளங்கும் சோதியனே மண்ணாகி விண்ணாகி பெண்ணாகி

ஆணாகி அலியாகி குருவாகி வந்து அடியாருக் கருளுவோனே 

வித்தகனுமாகி பித்தனுமாகி 

கூத்தனுமாகி உள் நின்றாடும்

ஈசனே எமையாளும் தில்லை

நடராஜனே சிவகாமி நேசனே


பாமாலை 33

அனலையும் புனலையும் ஏற்று

அரவை ஆபரணமாக அணிந்து 

அம்புலி கதிரவனை கண்களாக 

அழகுடன் திகழும் உன் ரூபத்தை

அனுதினமும் அகத்தில் பதித்து

அர்ச்சித்து மகிழ்ந்து அடியாருடன்

அவனியில் வாழ அருளாயோ எமையாளும் ஈசனே தில்லை நடராஜனே சிவகாமி நேசனே

பாமாலை 34

அத்தன் அமரன் அனந்தன் 

அழகன், அன்னவன்,அஜயன்,

ஆனந்தன், ஆண்டவன், ஆரியன்,

இமவான், இனியன், இறைவன்,

என எண்ணற்ற பெயர் கொண்ட 

நீ என்னவன் ஆவது எப்போது?

சொல்வாய் சொல்லற் கரியவனே 

ஈசனே எமையாளும் தில்லை நடராஜனே

சிவகாமி நேசனே


பாமாலை 35

 எல்லாம் இருந்தும் ஏதுமில்லா

ஏழை போல் திகம்பரமாகி

எங்கும் ஆண்டியாகித் திரிய

எக்காரணம் நானறியேன் ஈசனே

பொன்னம்பலமிருக்க 

அன்னை சிவகாமி இருக்க

ஆசை ஆனைமுகனிருக்க 

ஆறு முகனும், அடியாரு மிருக்க

இடுகாட்டை இடமாக கொள

ஏது குறை இங்கு கண்டாய் 

இங்கோர் எம் இதயமெனும்

இடமுண்டு  ஆனந்த நடனமாட

வந்தங்கு ஆடுவாய்  ஆசை தீர

ஈசனே எமையாளும் தில்லை நடராஜனே

சிவகாமி நேசனே

பாமாலை 36

 காண்பது கனவென தெரிந்தும்

கனவுதனைக் காணவே வாழும் 

வம்பனைக் காத்தருள ஐய்யனே

ஏற்றனை எண்ணிலாக் கோலமே 

கண்டுமதனை உணரா மூடனை

கருணையினால் ஆண்டருளும்

உனக்கு நிகர் காண்பதும் அரிதே

ஈசனே! எமையாளும் தில்லை நடராஜனே சிவகாமி நேசனே

பாமாலை 37

 அயனும் மாலனு மறியானை

அண்ட சராசரம் நிறைந்தோனை 

விண் மண் ஏகமாகி நின்றானை 

எங்கள் அண்ணா மலையானை

செஞ்சடை செந்தழல் மேனியனை

துஞ்சா தடியார் தொழுவோனை

பஞ்ச பூதங்களைப் பூண்டோனை 

அஞ்செழுத்தைக் கொண்டோனை

நெஞ்சில் பதித்து தொழுங்கால்

தொலையும் தொல்வினையுமே 

பாமாலை 38

ஐய்யனே எனை ஆண்டருளும்

மெய்யனே பொன்னம்பலனே

பொய்யனேன் எனை கைவிடாது

அம்மையாய் அப்பனாய் குருவாய்

வந்தெனக்கு ஞானமதனை புகட்டி

எங்கும் நிறை ஈசனுனை என்னுள்

கண்டு களித் துன்னடியாருடன் கூடி

தொழுது உன் தொண்டருக்குத்

தொண்டாற்றி உய்ய அருளுகவே

ஈசனே எமையாளும் தில்லை

நடராஜனே சிவகாமி நேசனே

பாமாலை 39

 மலைமகளுக் கிடம் ஈந்து 

மன்றில் நின்றாடும் ஈசனே

வல்வினை வசமாகி உனை மறந்த எனது பழவினையை

வேல் விழி உமையோடு வந்தெந்தன் பாசமுடன்

வினை யறுத்திட மறுத்தல் 

அழகோ  குஞ்சித பாதனே

ஈசனே எமையாளும் தில்லை நடராஜனே சிவகாமி நேசனே


பாமாலை 40

பசிக்கு மட்டுமே உணவென

பறந்து திரியும் பறவைகளை

பார்த்தும் கற்கவில்லை ஈசா

பொருளே பெரிதென வாழ்ந்து

பாவமே செய்து வரும் எனை

பவக் கடலில் வீழாது காத்தருள்

பரம தயாளா பார்வதி மணவாளா

எமையாளும் தில்லை வாழ் ஈசா

நடராஜா சிவகாமி நேசா

பாமாலை 41:

 பிறவி தோறும் பின் தொடர்ந்து நான் செய்யும்

தொல்வினை யறுத்து

தொழும் விதிதனை அறிவிக்க

தொண்டர்களையும் தோன்ற வைத்தும் நின்னை உணராது

அடியவரைத் தொழாது அவர் மெய்யுரை கேளாது மனத்தின் வழியே சென்று காணும் காட்சிதனை

மெய்யெனக் கருதி பெய் பல பேசி வினை பல செய்து

பாழ் நரகக் குழிக்கு அழுந்த

கயவருடன் கூடி 

திரியுமெக்கு அன்புடன்

காக்கும் வழிதனை யறிய

தவமியற்றவோ அமர்ந்தாய் பனி மலை கயிலைதனிலே

என்னே நின் கருணை

ஈசனே எமையாளும் தில்லை நடராஜனே சிவகாமி நேசனே!

பாமாலை 42:  

தான் தானென உதிக்குமிடம்

தனை நானறிவேனில்லை

தென்திசை யமர்ந்து போதிக்கும்

தயாபரனே! ஆத்ம ஞான குருவே!

உத்தம சீடனில்லையென எண்ணி

உதறித் தள்ளுவது உனக்கழகோ

உனையன்றி யெனக்கருள யாரே

உளரிங்கு உமையொருபாகா!

அம்மையும் அப்பனுமாகி வந்து

அருள் புரிவாய் அம்பலவாணனே!

ஈசனே! எமையாளும் தில்லை

நடராஜனே! சிவகாமி நேசனே!

பாமாலை 43

 அழகுக்கு ஒவ்வாத வல்லியுடன்

ஆடும்  தில்லை நடராஜனே என்

ஆணவ மலம் நிறை ஆட்டமதனை

அடக்க நின் பத மதனை வைத்து

அஞ்செழுத்தை திறம்பட ஓதி

ஆண்டு கொள்ள யாது தடையோ    

அஞ்சுகிறேன் பிறவிதளைக் கண்டு

ஈசனே எமையாளும் தில்லை நடராஜனே

சிவகாமி நேசனே

பாமாலை 44:

 நான் எனது என்று இருந்தவனை

நாம் நமதென மாற்றும் தேவனே

என்பு தோல் உடலெடுத்து எந்தன் 

அன்பில்லாத  உளமதில் நுழைந்து

அன்பே சிவமென உணர்த்திய பின்

அன்பு வடிவாக அங்கே அமர்ந்தரளி

அடியாரின் அடி தொழ  அருளாயோ 

ஈசனே எமையாளும் தில்லை

நடராஜனே சிவகாமி நேசனே


பாமாலை 45:

 பழுத்த முக்கனியும்

  புளித்திடும் அந்தியில்

கொழுத்த உடலும் 

விழுந்திடும் இறுதியில்

  புழுத்த இப்பிறவி இனியும்

    வாராதிருக்க ஐய்யனே

செழுத்த நின் பாதம் தனை 

 வைத்திடாய் என் சென்னியிலே

ஈசனே எமையாளும் தில்லை நடராஜனே 

சிவகாமி நேசனே

பாமாலை 46: : 

அருநெறி நிறை மறை அறியேன்

பொருள் பொதி பனுவல றியேன்

வருமிடர் களைய வகை யறியேன் 

கருணையுடன் வந்து காத்திடாயோ

ஈசனே எமையாளும் தில்லை வாழ் 

நடராஜனே சிவகாமி நேசனே

பாமாலை 47

 பிறவிதோரும் எனக்கருள

பின் தொடர்ந்து நிழலென வந்தினை ஐய்யனே!

பாவங்களே செய்தேனை

அஞ்ஞானம் அகற்றி

மெய்ஞானத்தை புகட்டி

பிறவிப் பெரும் கடலைத் தாண்டும் வழியினைக்

காட்டியும் உந்தனது

பெருமை உணரா யெனக்கு

போக்கிடம் ஏதுமில்லை

கழலுந்தனது பற்றாது திரியுமெனை

சிக்கனெப் பிடித்திங்கு அருளகவே

ஈசனே எமையாளும் தில்லை நடராஜனே

சிவகாமி நேசனே

பாமாலை 48

 காட்டில் நின்றாடும் கண் கண்ட தெய்வமே

ஏட்டில் எழுதவும் இயலுமோ

நின் பெருமைதனை

பிறவி தோறும் பின் தொடர்ந்து எனக்கு

இறவாத நிலை அருள வரும் கற்பகமே

  நின் பெருமைதனை பேச நின்னருளின்றி இயலாதென கூறும்

மொளன குருவே

வேண்டத் தக்கதையே வேண்ட    அருள்வாய்  என் அறிவில்           

நித்தமும் நிலை கொண்டு

ஈசனே எமையாளும் தில்லை நடராஜனே

சிவகாமி நேசனே

பாமாலை 49 

 மந்த புத்தியில் வினைபுரிந்து

வந்த காரணத்தை மறந்து

பந்த பாசத்திலுழன்ற கடையவனை

அந்தமில்லா நின் கழலிணை  கண்டு

சந்ததமும் தொழ  அருளாய் ஈசனே

எமையாளும் தில்லை நடராஜனே 

சிவகாமி நேசனே

பாமாலை 50 

ஆசை  அலையில் அகப்பட்டு 

உனை  மறந்து திரிந்த எம்மை கடைப்படாவண்ணம் காக்கவோ

விண்ணைத் தாண்டி வந்திங்கு

ஆடிப் பாடியும் மோனியாகி அருளினாயு பதேசம் எமக்கு

உனைப் போலிங்கு வேறு தெய்வம் 

உண்டோ இங்கு சொல்ல அரியவனே

எப்பிறவியிலும் உனை மறவா

வரம் அருளுக ஈசனே தில்லை

வாழ் நடராஜனே எங்கள்

பாமாலை 51

: நம்பியே நின் தாள் பற்றிட  

நடுங்குமே நவகோள்களும்

நின் நாமதனை நினைத்திட

நசியுமே செய்த கருமமும்  

நன்மைகளும் பெருகிடுமே

நமன் வரினும் நின் நாமம்

நமச்சிவாய எனும் மந்திரம்

நாவில் நின்றிருக்க அருளாயோ

ஈசனே தில்லை வாழ் நடராஜனே

சிவகாமி நேசனே

பாமாலை 52

உடுக்கை ஒலி எழுப்பி எந்தன் 

இடுக்கண் களைய வருவாயே

சிலிர்த்தெழும் செஞ்சடையுமாட புலித்தோலணிந்த பெம்மானே

வந்தித்தவரின் வினைத்தீர்க்க 

 நந்திமேலமர்ந் தோடி வருவாயே

எப்பிறவியிலும் வருவாய்  நீயே எந்தன்

முழு முதற் தெய்வமாக

வேண்டேன் வேறேதும் 

வேண்டியதை  தடையேதுமின்றி

தந்தருளுவாய் தயாநிதியே

ஈசனே எமையாளும் தில்லை நடராஜனே

சிவகாமி நேசனே

பாமாலை 53

 அன்பே வடிவான  ஐய்யனே

என்பு தோலபோர்த்த உடலுக்கே

அடிமையாகித் திரியும் எனக்கு

அம்மை அப்பனாகி‌ அன்புடன் 

அஞ்செழுத்து எந்நேரமும் எந்தன்

நெஞ்சினில் நிற்க அருளாயோ

ஈசனே எமையாளும் தில்லை 

நடராஜனே சிவகாமி நேசனே


பாமாலை 54

கல்வி ஏதோ கற்ற பின்

கல்லாதோர் முன் கடைவிரித்து

வாத பிரதிவாதம் செய்தேனை

கற்பதுனை யறிவதற்கே என்றும்

கற்கும் வழிதனையும் 

காட்டினாய் ஸ்வாமிமலைதனி லமர்ந்து

கற்பது உனையறிய என கற்பிக்கும் உன்

மெய்யடியார் வழி

நடந்து உனை யறிய அருளாயோ

ஈசனே எமையாளும் தில்லை நடராஜனே

சிவகாமி நேசனே

பாமாலை 55

 மாயையினால் மதி‌மயங்கி

அகப்பேயின்‌ பிடியில் அகப்பட்டு

ஆணவம் கொண்டு திரியுமெனை

அம்மை‌ யப்பனாகி‌ விண்ணிறங்கி

மண்ணில் குருவாகி வந்தெமக்கு

மெய்ப் பொருளை காட்டும் சோதியே

எப்பிறவி எடுப்பினும் உனையன்றி

வேறெதும் வேண்டாது காத்தருளே

ஈசனே எமையாளும் தில்லை

பாமாலை 56

 எத்தொழிலும் ஏற்றமே என

எமக்கு எடுத்துரைக்கவோ

எடுத்தாய் வேடம் பல புவிதனில்

உழைப்பின் உயர்வை உணர்த்தவே

மண் சுமந்தனை மதுரை மண்ணிலே

ஆணுமாகி பெண்ணுமாகி ஆடினாய்

அறுபத்து திருவிளைடலுமிங்கு

ஆடிய ஆட்டமதில் காட்டினா யெமக்கு 

ஆத்ம ஞானமும் வாழும் கலைதனை

அண்ணலே நின் கருணைக்கு ஈடேது

ஈசனே! எமையாளும் தில்லை 

நடராஜனே! சிவகாமி நேசனே

பாமாலை 57

 கருவிகள் ஒடுக்கி கரணமும் 

ஒடுங்கும் வழிதனைக் அறிந்து

மும்மலம் நீக்கி முன்வினை அற்று

என் சித்தமனைத்தும் சிவமாகி

உள் வெளியின்றி ஏகமாகி யாவும்

ஒன்றென ஒளிர வரமருளாயோ

தில்லையுட் கூத்தனே தென்பாண்டி

நாட்டானே எமையாளும் ஈசனே

நடராஜனே சிவகாமி நேசனே

பாமாலை 58

.பாலிலுறை நெய் போலும்

பாவியேனுள்ளு முறை ஈசனே

மேவியே உன்னடிதனைக் கண்டு

பிறவித் தளை நீக்கும் வழி தனை

அறிவித் தெனையாட் கொள்ள

குருவடிவாகி நீயே வந்தருளே

குருவாகி வந்திடினுமுனை யறிய

குறிப்பொன்றை உணர்த்துவாய்

குறையேதுமில்லா குணா நிதியே

ஈசனே எமையாளும் தில்லை

நடராஜனே சிவகாமி நேசனே

பாமாலை 59

 மும்மலம் கொண்ட யெம்மை

பரிந்து உய்விக்க வந்த உத்தமனே 

அஞ்ஞானமெனும் இருள் அகற்றி

மெய்ஞானச் சுடரேற்றி பிறவித் தளை

நீக்கவே நிலமதில் நின்று நித்தமும் 

நீள் கழலுந்தனதைக் காட்டி

நின்றாடும் சிற்றம்பல வாணனே

நின் கருணைக்கு எல்லை இல்லை

ஈசனே எமையாளும் தில்லை வாழ் நடராஜனே சிவகாமி நேசனே

பாமாலை 60

பொருள் வேண்டி வந்த எனக்கு

எப் பொருளென கேளாதருளியவா

மறையும் பொருள் வேண்டேன்

மன்னாதி மன்னவா தருவாயெனக்கு

எப் பொருள் எங்கு கேட்பினும்

அப்பொருளின் உடபொருளறியும் அறிவினை தடையின்றி தாராயோ

அன்னை சிவகாமியுடனா டும்

 ஈசனே எமையாளும் தில்லை

நடராஜனே சிவகாமி நேசனே

பாமாலை 61

 முப்பொழுது முனை தொழுதிடினும்

முன்வினை முடிவின்றி தொடர

பின் வினை தொடரா வழியறியேன்

மெய்யடியாரின் பண் பாடி பூசிக்க

தலைப்பட்டேனுக்கு அருளாயோ

ஐம்பூதத் தலம் கொண்ட ஐய்யனே

இப்பிறவியில் எனை ஆட்கொளாதினி

எப்பிறவியி லெனை ஏற்கச் சித்தமோ

எண்ணிலா பிறவி  வேண்டிலேன்

 ஈசனே எமையாளும் தில்லை

நடராஜனே சிவகாமி நேசனே 

பாமாலை 62

பசு பதி பாசம் ஏதுமறியா சீவனே நான்

பாவம் புண்ணியம் ஏதுமறியேன்

பவ உலகில் பிறவித் தொடரில்

அகப்பட்டேனை உந்தனி டக்கரம்

காட்டிய திருப்பாத மதனைச் சிக்கெனப் பிடித்து 

சிந்தை மகிழ சிவபுராணம் தனை

செப்பி மெய்யெல்லாம் விதிர் விதித்து

அகம் குழைய நின்னைப் துதிக்க

அனுதினமும் அருளாயோ‌ அய்யனே

 ஈசனே எமையாளும் தில்லை

நடராஜனே சிவகாமி நேசனே

பாமாலை 63

 பாழ் நிறை இவ் வாழ்வு தனில்

பாச வலையில் வீழ்ந்து உழன்று பாவங்களைச் செய்து யுந்தனது

கழலிணையில் வீழ்ந்த என்னை

கருணை பொங்க கண்டு எனக்கு

அஞ்ஞானம் நீக்கி ஐந்தெழுத்தினை

தந்து மெய்வழிதனை நல்கியருளிய

ஈசனே நின் கருணைக்கேது எல்லை

ஈசனே எமையாளும் தில்லை 

நடராஜனே சிவகாமி நேசனே

பாமாலை 64

எங்கோ பிறந்து ஏதோ செய்தேனை

இங்குயெனை ஆண்டு கொள்ள

கங்கையும் மங்கை சிவகாமியுடன்

வந்தருள் செய்ய வேண்டும் ஐய்யனே

மும்மலத்தி லுழலும் எந்தன் பால்

அய்யனே நீ கொண்ட அன்பினை

பகர எவருமிலர் முப்புரமதில் தனில்

பதியுந்தன் பாதமதை மறவாதிருக்க

அருள்வாய் ஈசனே எமையாளும் தில்லை வாழ் நடராஜனே

சிவகாமி நேசனே

பாமாலை 65

ஆணுமாகி பெண்ணுமாகி அணுவுமாகி அகண்டமாய் நிறைந்தவா! ‌

நீ பூண்ட வேடம் எண்ணவும் இயலுமோ

வேண்டித் தொழுத அடியவருக்கும்

வேண்டாதவருக்கும் தந்தையும் தாயுமான

தயாநிதியே

பேயினும் கொடியோன் எந்தன் 

மாயா மலம் நீக்கி ஆண்டருளே

உன்னையல்லாது என்குறையை

யாரிடம் சொல்வேன் ஐய்யனே!

பாமாலை 66

 கருணையே உருவாகி வந்திங்கு

அருணை வடிவில் நின்றெதன்ன

கல் எந்தன் மனதினைக் கரைத்து

சொல்லிற்கடங்கா உனை காணவோ

அறிவித்தும் அறிந்திலா மூடனை 

அண்ணலே மனமிரங்கி வந்திங்கு 

அறிவிலடங்கா விழுப் பொருளுனை

அடியேன் அறிவதுனை எங்கனமே

அறிந்துனைப் பாடிய அடியவரின்

ஆழ் மனதின் கண் வாழ்பவனே

அவர்தம் பாடலை பாடிப் பரவசமாகி

அடியேனும் மனமுருக அருளுவாயே


பாமாலை 67 

அறுபடை வீடேறி

நின்றாடும் அழகோனே

அருள் வெள்ளம் அள்ளித்தருவோனே

ஆறுமுகன் தினமுன்னை துதிக்கவே 

ஆறாத்துயர் அணுகா வண்ணம் 

அருள் வாயே

ஓதலும் உண்மையும் அறியா எனக்கு

சாதல் வருமுன் 

சண்முகா உன்னைக் கண்டு

காதல் கொண்டு உள்ளம் உருகி 

சந்தமுடன் பாடித்‌துதிக்க

அருள்வாயே

காலம் வீணே போக்கி கதறியழுவோனை

காலன் வருமுன்னே

காத்தருளுவாயே

மாய உலகில் வீழ்ந்து உழலுமெனை

மயிலேறி வள்ளி

குறமாதுடன் வருவாயே

பாமாலை 68

 கொடும் விடம் கொண்ட அரவுதனை

கண்டும் அஞ்சேன் 

பாயும் புலிதனையும் கண்டஞ்சேன்

நலமொழுக பேசும் நட்பினையும்

நயவஞ்சகரையும் கண்டஞ்சேன்

நின்னை நினையா நெஞ்சினை

கண்டஞ்சுமெனை காத்தருளாயோ

 ஈசனே எமையாளும் தில்லை

நடராஜனே சிவகாமி நேசனே

பாமாலை 69

 அம்மையும் அப்பனுமாகி இவ்

அகிலமனைத்திலும் நிறைந்து

இம்மையிலும் மறுமையிலும்

ஈடில்லா அன்பை பொழியும் உனை

இப்பிறவியி லுணராது போனால் 

எப்பிறவியி லுணர்வனோ ஐய்யனே 

என்னுளிருந்து இயக்கும் உன்னை

அகந்தை வலையில் அகப்பட்டு

அறியாது‌ மதிமயங்கி திரிவோனை

ஆண்டு கொள்ளே இக்கணமே

ஈசனே  எமையாளும் தில்லை வாழ்

நடராஜனே சிவகாமி நேசனே

பாமாலை 70

 செல்வத்தினுள் செவி செல்வம்

செம்மை பொருந்தி இருநதும்

சிவனுந்தன் பெருமை கேளா

செவியும் இருந்தும் பயனேது

குயிலொத்த குரல் இருந்தும்

குரலெழுப்பி யுன் புகழ் பாடாத।।।।

குரலும் கோட்டானின் குரலன்றோ

ஐம் பொறியனைத்தும் உனக்கே

அர்பணிக்க ருள்வாயே ஐய்யனே

 ஈசனே எமையாளும் தில்லை வாழ் நடராஜனே சிவகாமி நேசனே


பாமாலை 711

பிழைகளே செய்து வாழுமென்

களை நிறைந்த மனதினை

துழைத்து நின் நாமத்தினை

பதிப்பது நின் கடமையன்றோ

என்றோ வருவேன் என எண்ணாது

இன்றே வந்தெனை ஆட்கொளாயோ

எமையாளும் ஈசனே தில்லை வாழ்

நடராஜனே சிவகாமி நேசனே

[10:25, 15/05/2025] Radha singaperumal Gayathri: அறியேன் நீ அறிவித்தாலின்றி

போக்கிடமேதும் அறிகிலேன்

போக்கும் வரவுமில்லா புண்ணியனே

வாக்கும் சிந்தனையாவும் உனதாக 

வரமருள்வாய் வளர்மதி சூடியவனே

பிறவிச்சூழலில் அகப்பட்ட எனக்கு

பிறவாநிலைத் தந்தருள தடை ஏதோ

நின்னைத் தொழும் அடியார் போல் 

நானும் தொழுதேற்ற அருள்வாயே

எமையாளும் ஈசனே தில்லை வாழ்

நடராஜனே சிவகாமி நேசனே

பாமாலை 72

 சிவனுந்தன் பெருமை கேளாத செம்மையுடைய

செவியிரண்டும்

இருந்தென்ன

குயிலொத்த குரல் இருந்தும்

குரலெழுப்பியுன் புகழ் பாடாத

குரலும் இருந்தென்ன

ஐம் பொறியனைத்தும் உனக்கே

அர்பணிக்க ருள்வாயே ஐய்யனே

 ஈசனே எமையாளும் தில்லை வாழ் நடராஜனே சிவகாமி நேசனே

பாமாலை 73

பூசித்துன் னருள் பெற்றவருண்டு

பூவுலகில் யானும் ஆசை கொண்டு

பாடலிலுன் புகழைப் பாட வந்தேன்

புல்லறியேன் பாடுவது எங்கனமே

அடிமுடி காண முடியாத அற்புதமே

அகத்தினுள் ஒளிரும் பேரொளியே

நீயே வந்திங்கு அறிவித்தாலன்றி

அறிந்தேன் என்பதும் ஒரு நாடகமே

பாமாலை 74

உலகம்‌ அளந்தவனும் காணா

ஒப்பற்ற உன் பொன்னடி காண

ஓடி வந்த தேவரும் கோடி கோடி

உன்னடி காண நானும் வந்தேன் பாடி பாடி

உளமதில் மிளிர் நற் சோதியே

உலகினைக் கண்டு மதி மயங்கி திரிந்து 

உன்னடி காணா புல்லனெனக்கு உன்

திருவடி காட்டி ஆடுவது அதிசயம் அதிசயமே

பாமாலை 75

 மணமாய் மலருக்குள்ளும்

தீஞ் சுவையாய் கனியிலும்

நெருப்பில் நீராய் நிற்கிறாய்

இருப்பினும் காணேனுன்னை

ஏகமாய் எங்கும் இருக்கும் ஈசா

ஏது செய்யினும் அடங்கா அவா ok

எத்தவம் புரியவதோ அறியேன்

அத்தவம் செப்ப அறிவேனுனை

ஐம் பொறியின் செய்கை யடங்கி

அறிவும் அடங்கி எனை மறந்து

தூங்கியும் தூங்கா நிலை நின்று

துதிப்பது உன்னை எக் காலம்

சில நொடியேனும் என் சிந்தையில்

சிவனே நில்லாமல் போவதேனோ

செவ்வனே யானும் செபித்தேன்

செந்தழல் மேனியா நின் நாமத்தை

குற்றமுண்டோ தொழுகை எனதில்

குற்றமேதுமில்லாத குணக்குன்றே

குரு வடிவாய் நீயே வந்தெனக்கு

கருவூர் போகாது காத்திடாயோ

பாமாலை 76

சமய சாத்திரம் அறியவொட்டா

சிவனே உனை அறிவிக்காத

சமயமும் சமயமல்லென அறிந்து

சிவச் சின்னமணிந்து சிவ சிவயென

சிந்தையை உந்தன் திருவடிக்கீழ்

சிரம் தாழ்த்தி வைத்தேன் பரமனே

சிறுபிள்ளையென  தள்ளல் ஏனோ

சிறுநகை புரியும் சிவகாமி பரிந்தும்

சேர்க்காது ன்னடி கீழிருப்பது ஏனோ

பாமாலை 77

 பிறப்பெனும் பிணியி லகப்பட்டு

பிஞ்ஞகனே செய்வதறிகிலேன்

பிறந்தபின் மாயாச் சக்தியினுள்

பிணையுண்டேன் ஈசனே உனை மறந்தேன் 

பிறந்தும் பிறவா நிலையடைந்த

மெய்யடியாரைக் கண்டுணராது

காலமதை வீணே போக்கிய என்னை

கால சம்ஹாரனே கருணை காட்டி

கழலுந்தனடியில் நேர்த்திடாயோ

ஈசனே எமையாளும் தில்லை‌ வாழ் 

நடராஜனே சிவகாமி நேசனே🙏🙏🙏🪷🪷

பாமாலை 78

 கடல் சூழ் இவ் வையகத்தை

காலால் நடந்து பயனேது

முகில் சூழ் மலைசிகரத்தை

மூச்சிறைக்க ஏறிப் பயனேது

முக்கண் நம் சிவனை காணாது

மூவுலகை வென்றும் ஏது பயன்

திக்கெட்டும் நம் புகழ்  பரவியும்

தில்லை நடராஜனைக் காணாவிடில்

தீராது பின் தொடரும் ஊழ்வினையுமே

பாமாலை 79

 சேற்றில் விழுந்து கிடந்தேனைத் தில்லைத் தேவே நீஇரங்கி

ஊற்றுக் கோல்தந் துதவியுன்தாள் உறுமா றிட்டாய் உன்னருளை

ஏற்கத் தகுதி இல்லேனுக் கிங்ஙன் இரங்கும் ஈச!உன்போல்  

வேற்றோர் தெய்வம் மேதினியில் உண்டோ விளம்பற் கறியேனே

[10:30, 15/05/2025] Radha singaperumal Gayathri: விண்ணாள வேண்டேன் யான்

மண்ணாவும் வேண்டேன் மா தேவா

பெண்ணிரு தேவியரைக் கொண்டு

தண்மை மிகு மதி சூடிய பெம்மானே

மண்ணுலகில் கறியமுது படைத்த

திண்ணனைப் போலுனைத் தொழ

கண் திறந்து கருணை பொழிவாய்

எமையாளும் ஈசனே தில்லை வாழ் நடராஜனே எங்கள் சிவகாமி நேசனே

பாமாலை 80

 சேறாகிய மாய வுலகில் வீழ்ந்து

சோற்றுக்காக  அலைந்து திரிந்து 

சோர்வுற்று செய்வதறியாது

திகைத்துனை நாடி வந்தேன்

இல்லை இனி பிறவி என கூறும்

தில்லையரசே நின் கழலிணைக்

கருணை கொண்டு காட்டிட நானும்

சிக்கெனப் பிடித்து உய்வேன் எந்தன் 

ஈசனே தில்லை வாழ் நடராஜனே 

சிவகாமி நேசனே.


பாமாலை 81

 மறை நான்கினைத் தந்தருளி அம்

மறை பொருளாகி‌ விளங்கியும் 

மறைந்தே நிறைந்திருக்கும் உனை

குறைகளையே குணமாக கொண்டு

நரை திரையும் நோயும் வந்தபின்

அரைக் கண் பார்வையோடு உந்தன்

கரை சேர கழலிணை தேடி வந்தேன் 

அரையில் புலித்தோலுட னாடும்

எல்லை உந்தன் வந்த  எனக்கு இனி

இல்லை யென கூறாத ருள்வாய்

தில்லை சிற்றம்பல நடராஜனே எம்

ஈசனே  சிவகாமி நேசனே 

பாமாலை 82

ஐம் பொறிக்குள்‌ அறிந்தும் அகப்பட்டு 

ஆசைக்கடலில் அல்லல் படுமெனை

ஆடலரசே உனையன்றி யாறிவார்

ஓதல் ஏதுமறியா ஏழை யெனக்கு

சாதல் வருமுன் சங்கரா  நீயே வந்து

காதலாகி உனைக் காண ருள்வாயே

[10:35, 15/05/2025] Radha singaperumal Gayathri: உடம்பே பெரிதென உடல் வளர்த்து

உலகைச் சுற்றி ஊர் புகழ பொருளீட்டி

உனை மறந்து மூப்பெய்தி நா குழறி

உற்றோர் ஊரோர் உதறித் தள்ளுமுன்

மண்ணில் நல்ல வண்ணம் வாழ

மந்திரம் ஓத குருவாய் வருவாயே

[10:37, 15/05/2025] Radha singaperumal Gayathri: "_"சுற்றமே பெரிதன வாழ்ந்து

குற்றம் பல புரிந்துனை மறந்து வாழ்ந்தேனை

கொற்றவை‌ மகிழ் எம் 

பற்றற்ற பரா பரனே

கற்றவை பல கலை

ஆயினும் 

சற்றே  நின்னருளில்லை ஆயின்

கூற்றுவன் எதிரில்

பயனேதுமில்லை

ஏற்றுவர் எவரும் இங்கு இல்லை ஐய்யனே

காத்தருளாய் கருணா நிதியே

ஈசனே எமையாளும் தில்லை

நடராஜனே சிவகாமி நேசனே

[10:38, 15/05/2025] Radha singaperumal Gayathri: அதுவோ இல் இதுவோ என

ஆய்விற்கு அப்பாலுறை ஈசனே

கண்டவருன்னை துதித்துப் பாடிய

காவியங்கள் எண்ணவும் ஆகா

அன்னவரின் பனுவலை பாடி

காண முற்பட்டு தொலைந்வனை

தாயினும் பெரிய தயாநிதியே!

பேயினும் கொடியோன் என்னை

மாயா மலம் நீக்கி ஆண்டருளே

[10:38, 15/05/2025] Radha singaperumal Gayathri: "_"புலனைந்திலும் பொய்மை

பூண்டு அறிவிழந்து வாழும்

தகமையில்லா தற்குறி எனக்கு

பகைமையின்றி  உலகில் வாழ

வாய்மையே வாழ்வின் குறியெனெ ஐய்யனே

உன்னையன்றி

உரைப்பவர் வேறே எவரும்

உலகினில் உண்டோ   தில்லை வாழ் ஈசனே 

சிவகாமி நேசனே🙏🪷

[10:40, 15/05/2025] Radha singaperumal Gayathri: கேள்வியு மற்று கேட்பாரற்று

கிடந்தத எனை உன்னடியார்

கூட்டத்தோடு கூட்டிய கூத்தனே!

நின் கூத்தினைக் காண தேவரும்

நண்ணி வந்து தன்னைமறந்தனரே

நீயுமாடி எம்மையும் ஆட்டுவித்து

இம்மை மறுமையிலும் உன்னடியில்

இருத்துகவே காரை அம்மை போல

ஈசனே எமையாளும் தில்லை

நடராஜனே சிவகாமி நேசனே

[10:41, 15/05/2025] Radha singaperumal Gayathri: கருணையே உருவாகி வந்திங்கு

அருணை வடிவில் நின்றெதன்ன

கல் எந்தன் மனதினைக் கரைத்து

சொல்லிற்கடங்கா உனை காணவோ


அறிவித்தும் அறிந்திலா மூடனை

அண்ணலே மனமிரங்கிa வந்திங்கு

அறிவிலடங்கா விழுப் பொருளுனை

அடியேன் அறிவதுனை எங்கனமே


அறிந்துனைப் பாடிய அடியவரின்

ஆழ் மனதின் கண் வாழ்பவனே

அவர்தம் பாடலை பாடிப் பரவசமாகி

அடியேனும் மனமுருக அருளுவாயே

[10:41, 15/05/2025] Radha singaperumal Gayathri: "_"அகண்டமாய் நிறைந்தவா! ‌நீ

பூண்ட வேடம் எண்ணவும் இயலுமோ

வேண்டித் தொழுத அடியவருக்கும்

வேண்டாத சீவனுக்கும் தந்தையும் தாயினும்

பெரிய தயாநிதியே

பேயினும் கொடியோன் எந்தன் 

மாயா மலம் நீக்கி ஆண்டருளே

உன்னையல்லாது என்குறையை

யாரிடம் சொல்வேன் ஐய்யனே!

[10:41, 15/05/2025] Radha singaperumal Gayathri: "_"வினைகளையே தினையாக

வித்திட்டு மனமெனும் நிலத்தில்

ஆசையெனும் நீர் பாச்சி அங்கே

ஆணவத்தை உரமிட்டு வளர்த்தேன்

 என் வினைதனை அறுவடை செய்வார்

எவருமில்லை ஈசனே

எனை ஆண்டு கொண்டு அருளாயோ

திருத்தினையூர் வாழ் சிவகொழுந்தே

[10:42, 15/05/2025] Radha singaperumal Gayathri: "_"சில நொடியேனும் என் சிந்தையில் சிவனே

நில்லாது  போவதேனோ 

செவ்வனே யானும் செபித்தேன்

செந்தழல் மேனியனே நின்  திரு நாமத்தை


குற்றமுண்டோ தொழுகை எனதில்

குற்றமேதுமில்லாத குணக்குன்றே

குரு வடிவாய் நீயே வந்தெனக்கு

கருவூர் போகாது காத்திடாயோ

[10:43, 15/05/2025] Radha singaperumal Gayathri: "_"மறைகள் துதிக்கும் முறைதனை கேட்டறியேன் ஓதவுமறியேன்

தொண்டர் போல் தொழவுமறியேன் 

கசிந்துருகா இக் கல் நெஞ்சில்

காதல் பெருகி கண்ணீர் மல்கி 

அடியார் பாடலை பாடவுமறியேன்

ஏதுமறியா ஏழை எனை அஞ்சேலென

ஆட்கொண்டு நின்னடி சேர்ப்பாயா

ஆடல் அரசே சிற்றம்பல வாணனே

[10:45, 15/05/2025] Radha singaperumal Gayathri: ஐந்தறிவு சீவனுக்கு அருள் புரிந்து அதன் மேலமர்ந்து பவனி வருபவனே

ஆறறிவு கொண்ட என்னை இன்னும் 

ஏறெடுத்துப் பாராதிருப்ப தேனோ


சனன மரணமென சுழன்றும்

கன்ம மலத்தில் உழலும் எந்தனது

கருத்தினை திருத்தி உன்‌வசமே

இருத்த இன்னும் மொளன மேனோ

[10:45, 15/05/2025] Radha singaperumal Gayathri: "_"வாயிருந்தும் உனை வாழ்த்தாது

வீணே வாழ்ந்து கெட்டேன் ஐய்யனே 

காண வொட்டா காட்சி தனைக் கண்டு

காலமெல்லாம் கழித்தே ஒழிந்தேன்


காலன் வரும் வேளையில் எனை

காப்பது நின் கடமையன்றோ நின்

கழலிணைப் பற்றியவனை தவறாது

காத்தருளுவாயே கால சம்ஹாரனே

[10:45, 15/05/2025] Radha singaperumal Gayathri: "_"விடை உடை கொடியுடையோய்

கொடி உடை நாயகியுடன் உன்

சடை முடியில் இளமதியுமின்ன

படை பூத கணங்களைக் காண

தொடை நடுங்கி அசுரரும் ஓட

கடை வாயில் பால் வழியும் சேய்

பாடிய பனுவலை உளம் குளிர

அடியவரும் பாடுவதை போல்

அடியேனும் பாட அருள்வாயே

[10:45, 15/05/2025] Radha singaperumal Gayathri: விரிந்து கிடக்கும் பூவுலகுக்கு

வித்தான விழுப்பொருளே

விந்தையிலும் விந்தை உந்தன்

வினையை யாரே யறிவார் ஐய்யனே

உந்தன் வினையாவும் திருவினை

எந்தன் வினை செய்வினை ஆவது

எங்கனமே நானறியன் பராபரமே

[10:45, 15/05/2025] Radha singaperumal Gayathri: _"சுழன்று வரும் பிறவிப் சுழலில் 

சுற்றிச் சுற்றி பிறந்தும் இறந்தும்

சுகம் காணாது தவிக்கும் நமக்கு

சுருதி தந்த சிவனை நினை மனமே


நிலமதில் நிலையாமை தனை

நித்தமுணர்த்த நிருத்தியமாடி 

மாய வலையை அறுத்தோனை

தூய ஞான உருவை நினை மனமே

[10:45, 15/05/2025] Radha singaperumal Gayathri: "_"அளவிலா ஆக்கமுடையோனின்

அருளமுதம் வடியும் முகம் கண்டு நம் சிவனை

நெஞ்சிலிருத்தி நினைத்து வழிபட

அஞ்சா வாழ்வு கிட்டுமென் மனமே


கருணை மிகு முக்கண்ணும்

காத்திருந்து அருள் பொழியும் 

நம் சிவனை நினையாது 

நாடாதும்  போவதேனோ என் மனமே

[10:46, 15/05/2025] Radha singaperumal Gayathri: "_"அறிவதற்கு அரியவனே 

பருதியும் பழிக்கும் ஒளியுடையோய் நின்

பெருமைதனை

அறிய மெய்யடியார் பின் சென்று 

சரியை கிரியை புரிந்து 

சுருதி வழி நின்று 

திருந்திய சுத்த மனமே பெரிதெனக்

கருதியுன் பொன்னடி இப் பிறவியில் காண்பது

அரிதினும் அரிதென அறிந்தேன்‌‌ ஐய்யனே

[10:46, 15/05/2025] Radha singaperumal Gayathri: செந்தழல் ஒத்த‌ செம்மேனியும்

இளமதி பூண்ட செஞ்சடையும்

திகழொளி மார்பில் திரு நீறும் 

திக்கெட்டில் பறக்கும் சடை முடியும்

கரு நீல கண்டத்தில் நெளி பாம்பும்

தணலேந்திய கரமொன்றும் 

தயை காட்டும் மறு கரமும்

நின்  சிலம்பணிந்த காலும் 

மற்றொரு காலடியில் முயலகனும்

காலன் வரும் போது கண்ணெதிரே 

காணப்பெறின் பிறவிப்பயனேயாம்

[10:46, 15/05/2025] Radha singaperumal Gayathri: சுற்றமே பெரிதன வாழ்ந்து

குற்றம் பல புரிந்துனை மறந்தேனைதேனை

கொற்றவையுடன் நடம் புரிந்த

பற்றற்ற எம் பரனே பாரியனே

கற்றவை பல கலையாயினும்

சற்றே நின்னருளில்லை ஆயின்

கூற்றுவன் எதிரில் ஏது பயனே

[10:47, 15/05/2025] Radha singaperumal Gayathri: ஒப்பற்ற நின் கருணைக்கு

உவமையில்லா ஒளிச்சுடரே

உண்மைப் பொருளுனை தொழாது

உலகிலுழன்று ஊழ்வினையில்

வீழ்ந்து கிடக்குமெனை பையவே என்

உள்ளம் புகுந்து ஆட்கொள்ளுவாய்

ஆடல் அரசே தில்லை வாசனே!

[10:47, 15/05/2025] Radha singaperumal Gayathri: "_"ஆழ் கடலின் அமிழ்த மிருக்க

ஆதிசேடனஞ்சும் விடம் கொண்டனை

மனம் மயங்கும் சுகந்தமிருக்க

மயான நீறணிந்த விந்தை ஏனோ

கண்டு வியக்கும் உரு இருக்க

கண்டஞ்சும்  கணங்களுடன் 

புலித் தோலணிந்து

அஞ்சத்தகு வேடம் 

பூண்ட நீ என்னைக் கண்டு அஞ்சாது நின் கழலிணையில்

புகலிடம் தாராயோ

[10:48, 15/05/2025] Radha singaperumal Gayathri: "_"எண்ணற்ற இடமிருந்தும்

ஏற்றம்தர என்னகத்தே

குடி கொண்ட  குணக்குன்றே

உற்ற இடம் விட்டு எங்கோ தேடி வீணே

மதி மயங்கியலையும் மெனக்கு கோலங்கள்

பல காட்டினாய்

காலங்கள் கழித்தேனே யல்லாது 

கண்டறியேன் கேட்டறியேன் 

எத்தகைய வேடம் உனதென

எங்கனமறிவேன் ஈசா 

வீணேயலையும் இவ் வீணனின் 

வினை யறுத்து ஆட்கொள்வதே

உனக்கழ கன்றோ அல்லாது 

பழிச் சொல்லுக்கு நீ ஆளாவது அழகோ

சொல்வாயென் ஐய்யா

[10:48, 15/05/2025] Radha singaperumal Gayathri: விரிகடல் சூழ் உலகில் பிறந்நு

வினையே புரிந்துன்னை மறந்து

உடல் வளத்தேனை கருணையால்

ஆடல் பல செய்து யெனை ஈர்த்தும்

அறிவில்லா இழிச்செயல் புரியும்

வீணனெனை உய்விக்க வந்த

தில்லையரசே நின் கருணை தனை

இயம்ப நின்னருளன்றி இயலுமோ

[10:48, 15/05/2025] Radha singaperumal Gayathri: அவனியிலெம் வினையறுக்க

ஆடியும் பாடியும் வந்த அன்பனே

உந்தனது கருணையை ஏட்டினில்

உரைக்கவும் இயலுமோ ஈசனே!

உண்டியும் உறவும் பெரிதென 

வாழ்ந்த யெமக்கு மெய் ஞானமதை

அறிவித்து பிறவித் தளை நீக்க

வந்தமைக்கு செய்யும் கைமாறு

ஏதுமறியேன் இந்த சிறியேன் யானே

[10:49, 15/05/2025] Radha singaperumal Gayathri: "_"மனத்தினை வென்று

மலர் பாதம் உந்தன் தனை

கண நேரமும் விடாது

கருத்தினில் இருத்திய

சரித்திர புகழ் அடியாரைத்

வணங்கி அவர் வழி நடந்தும்

அடங்காயென் மனத்தினை கண்டு

இன்னும் இரங்கா திருப்பது

இனியும் அழகோ தியாகேசா

[10:49, 15/05/2025] Radha singaperumal Gayathri: "_"வாய் திறவா மொழி பேசி

உண்மை தனை உணர்த்தியும்

உணரா சீவனாய் நானிருக்க

பாடியும் ஆடியும் காட்டினாய்..


உன்னாடலை யறியாது 

பொய்மையே பேசி அனுதினமும்

பொழுதினை சுருக்கி வாழுமெனை

அழுதுன்னை பெற்றவரோடு


கூட்டியும் அறிகிலேன் இனி

புகலெனக்கு இப்புவியில் யாரோ

செய்வதறியா உன்னடி சேர்ந்தேன்

சிவனே சிற்றம்பல நாதனே

[10:50, 15/05/2025] Radha singaperumal Gayathri: "_"ஆடியே தில்லையில்

வாடிய சீவன் நம்மை

பாடிய நால்வர் தம்முடன்

கூடியே உய்யும் வழிதனைக்

காட்டுமானந்தக் கூத்தனை

நாடியே தொழாத நெஞ்சினை 

சாடியே தூற்றுவர் நினை மனமே

[10:50, 15/05/2025] Radha singaperumal Gayathri: "_"தியாகம் தனைக் காட்ட விடத்தினை விழுங்கி 

ஞானத்தினைக் காட்ட  

மோன உருவாய் அமர்ந்தாய்

பாசமதைக்காட்ட பன்றிக்கும் 

பாலூட்டி சீராட்டிய எந்தையே

பற்று தனை விட்டொழிக்கும்

பாதை காட்ட சுட்டெரிக்கும்

சுடுகாட்டைக் கொண்டங்கும்

ஆடும்  ஆடலரசே போற்றி போற்றி

[10:50, 15/05/2025] Radha singaperumal Gayathri: "&"ஏது அறிவித்தாலுமறியா 

என்னுள் புகுந்து ஆட்கொள்ள வரினும் 

ஏற்கில்லேன் உன்னை

அடியவர் ஆயிரமாயிரம் உனைத்

தொழுது தொண்டராகி நிற்க

நின் வழி நில்லாயெனை 

செய்யும் வகை யாதென யறியாது

திகைக் கின்றனையோ தில்லை நாதனே

[10:51, 15/05/2025] Radha singaperumal Gayathri: "_"உற்ற கணத்தில் ஓடிவரும்

உனை விடுத்து மதி மயங்கி

உதவா ஊரார் பின் வழி நடந்து

ஓடி வழி தவறி ஓயலுற்றேன் 

செய்யும் வழியறியா சிறியோனை

சிந்தையில் வைத்து காத்தருளி

சிவபுரம் சேர்த்தி டாயென் செம்மலே

[10:51, 15/05/2025] Radha singaperumal Gayathri: தேவனே திரு சிற்றம்பலனேனே

சிவனே சிவகாமி நேசனே

ஞானமே உருவான மோன குருவே

பரமனே முப்புரமெரித்தோனே

வீரனே விடம் வைத்த கண்டனே

அரனே அறிதற்கு அரியோனே

பூரணனே எங்கும் நிறைந்தோனே

எமனே வருகினும் இனி அஞ்சேனே

[10:52, 15/05/2025] Radha singaperumal Gayathri: கள்ளமிகு என் கல் மனத்தில்

வெள்ளமென பாயும் ஆசை

துள்ளி வந்து அலைகழித்து

பள்ளமெனும் பாவத்தில் விழ்த்தி

கொள்ளைத் தீவினை செய்தேனை

கொள்ளித் தீக்கிரையாகுமுன்

தள்ளி நின்று பாராது அருளாயோ

வெள்ளிப்பனி மலையோனே

[10:52, 15/05/2025] Radha singaperumal Gayathri: துயரமும் தூக்கமு மறிந்த எனக்கு

துயரறுக்க வழிதனை காட்ட

தூயவெண்ணீறணிந்த மேனியில்

தும்பை துலங்க சூக்கும வழியான

தூங்கியும் தூங்கநிலையாம்

துரிய நிலை அறிவிக்க வந்த

தூய பரமனே தொன்மையனை

தூமணியே போற்றி போற்றி

[10:53, 15/05/2025] Radha singaperumal Gayathri: "_"ஐம்புலனுக்கு எட்டாதவனை

அறுபத்து ஆடல் புரிந்தோனை

ஏட்டிலடங்கா எழிலரசனை

புவியில் பிறந்து ஆவி அடங்குமுன்

பூசிக்க புண்ணியமும் வேண்டுமே

[10:53, 15/05/2025] Radha singaperumal Gayathri: "_'ஆகாயம் அளந்த ஐய்யனே 

இக்காயம் நொடிந்து வீழ்ந்து 

நோய் பல எனை அணுகி

வாய் குளறி உன் நாமத்தை கூற இயலாது போய்

கூற்றுவன் வருமுன் 

அன்பு பூண்டு  எனக்கருள

ஆகாதது ஒன்றுண்டோ உன்னால்

[10:54, 15/05/2025] Radha singaperumal Gayathri: "_"ஐம்புலனும் மாயையில் சிக்கி

அடங்கா ஆசைக் கடலில் மூழ்கி

வீணே கழித்தேன் பிறவிதனை

நிழலாய் தொடர்ந்து காத்தனை

நிமலனே  உணராது உனை

பேசாது உன் புகழைப் பாடாது

நாயேன் நாட்களைக் கழித்து

திரியுமெனை காக்கும் என்

அம்மை அப்பனே அருணாசலனே

நின் பெருமையை பாடுவதும்

நின்னருளே அன்றி வேரெதுண்டோ

மெய்யடியார் கண்ட மெய்யனே

[10:54, 15/05/2025] Radha singaperumal Gayathri: பூவுக்குள் மணமாய்

கல்லுக்குள் ஈரமாய் 

கண்ணுக்குள் ஒளியாய்

உடலுக்குள் உயிராய்

ஒளிந்து ஒளிரும் ஈசா

எல்லாம் இருந்தும் ஏனோ

நிறையில்லா பிரமிப்பு...

உன்னைக் காண்பது

உன்னருளின்றி ஆகுமோ

நீ அறிவித்தாலின்றி யாரே

உணர்த்துவர் ஞான குருவே

[10:55, 15/05/2025] Radha singaperumal Gayathri: எவ்விடமும் நீயே இருக்க

இவ்விடம் எனதென்று வாழும்

என்னிடம் கருணையுடன்

காணுமிடம் யாவும் உனதேயென

உணர்த்த கயிலை‌யை விட்டு

இடபாகமதில் மங்கையுடன்

விடையேறி புலித்தோலுடுத்தி

சடைதனில் இளமதி சூடி இக்

கடையவனை ஆண்டு கொண்ட

கருணையை யாரிடம் இயம்ப!

[10:55, 15/05/2025] Radha singaperumal Gayathri: "_"முல்லை சூடிய மாசிலாமணியே!

கல்லை யொத்தயென் மனதை

கரைத்து கசிய வைத்து

தொல்லைப் பிறவித் தளைதனை

அறுத்தெனை ஆண்டு கொள்ள

இல்லை இங்கு வேறொரு தெய்வம் உனைப்போல

தில்லை நடராசனே சிவகாமி நேசனே

[10:55, 15/05/2025] Radha singaperumal Gayathri: "_"புலனைந்திலும் பொய்மை பூண்டு 

அறிவிழந்து வாழும்

தகமையில்லா தற் குறி எனக்கு

பகைமையின்றி  உலகில் பண்புடன் வாழவும்

வாய்மையின் நெறியில் நிற்கும் வழியை

ஐய்யனே உன்னையன்றி

உரைப்பவர் வேறே எவரும்

உலகினில் உண்டோ  

அம்மை அப்பனே

[10:56, 15/05/2025] Radha singaperumal Gayathri: "_"குறியில்லா வாழ்வு தனில்

குறையே காணுமெனக்கு

அகத்திலினுள் புகுந்து உன்

அஞ்செழுத்து மந்திரம் ஓதி

அடியார் கூட்டமுடன் சேர்த்து

பிறவித் தளை நீக்கிய பிஞ்ஞகா

நின் அருளுக்கு நிகர் யாதுளதோ அறியேன்

சிவகாமி நேசனே என்

தில்லை நடராஜனே

[10:56, 15/05/2025] Radha singaperumal Gayathri: "_"குறியில்லா வாழ்வு தனில்

குறையே காணுமெனக்கு

அகத்திலினுள் புகுந்து உன்

அஞ்செழுத்து மந்திரம் ஓதி

அடியார் கூட்டமுடன் சேர்த்து

பிறவித் தளை நீக்கிய பிஞ்ஞகா

நின் அருளுக்கு நிகர் யாதுளதோ அறியேன்

சிவகாமி நேசனே என்

தில்லை நடராஜனே

[10:57, 15/05/2025] Radha singaperumal Gayathri: "_"உள்ளும் புறமும் ஒளிர்ச்‌ சுடரை

கள்ளமில் மனதில்  கசிந்துருகி

மாயவுலகின்  வசமாகுமுன்

மாயோன் தேடிய தேவனை

புனலும் இளமதி சூடியவனை

இருவினை தனை அறுத்து

இருத்தியே தன் கழலிணையில்

பேரின்பம் தரும் பெம்மானின்

பொன்னடி புகாயோ பேய் மனமே

[10:57, 15/05/2025] Radha singaperumal Gayathri: "_"அறிவதற்கு அரியவனாய்

அறிந்தோருக்கு மெய்யறிவாய்

ஆதியாய் முதலாய் முடிவாய்

ஆகி விளங்கும் தில்லையரசே

ஏதுமறியா ஏழையென் சொல்

வன் சொல்லென தள்ளாது 

ஏற்றருள் புரியாய் சிவகாமி நேசனே

[10:57, 15/05/2025] Radha singaperumal Gayathri: "_"வினையே புரியும் மனதில்

வித்தகா உனை வைக்காது

வினையையே வித்தாக வித்திட

வினையின் சுமைப் பெருகி

வினைச்சுழலில் அகப்பட்டேன்

விரைந்தெனைக் காக்க விருப்பமில்லையோ

விரைந்தெனை  காத்தருளாய்

விமலா உனையன்றி யாருளரோ

[10:58, 15/05/2025] Radha singaperumal Gayathri: _"அடியவர் உந்தனைப் புகழக் கேட்டு

அரனே உனைக்காணுவது எளிதென அக்கணமே

அடிமையானேன்

அகத்தில் நீ இருக்க புறத்தில் 

அகல் விளக்கேற்றி வாய் முணுக்க

அங்குமிங்கும் உன்னைத் தேடி

அலுத்து விட்டேன் அய்யனே உன்

அடியவருக்கு அருள் புரிந்தவா

அடியேனது குறை காணாது

அருளாயோ நீயெனக்கு

[10:58, 15/05/2025] Radha singaperumal Gayathri: "_"உண்டு உடுத்து பேணிய

உடலும் அழியக் கண்டேன்

உற்றார் பொற்றாரவர் தம்

உயிரும் பிரியக் கண்டேன் 

உண்மை மறையக் கண்டேன்

உலகமும் மாறக் கண்டேன்

உலகை உண்மையென நம்பி

உந்தனடி பணியா எந்தனை

உந்தனடி யெனக்கு தாராயோ

[10:59, 15/05/2025] Radha singaperumal Gayathri: "&"பொன்னை ஒத்த உந்தன் மேனியை

காணா கண்ணும் எந்தன்

கண்ணல்ல பெம்மானே நின்

திண் தோளினைப் புகழ்ந்து 

பண் கொண்டு பாடினேனில்லை

வெண்ணீறணிந்த என் ஈசனே

 நின் முற்றம் சுற்றா எந்தன் கால்களும் 

தொழா கைகளும் 

இருந்தென்ன பயன்

மண்ணுலகின் நாதனே

உடல் வீழுமுன் யெனை  ஆண்டு கொள்ளே

[10:59, 15/05/2025] Radha singaperumal Gayathri: "_"உடலைத் தந்ததனுள்

உயிரை வைத்தனை 

உணர்வையும் தந்ததனுள்

உன்னை மறைத்தனை

உன்னையறிய வழியறியேன்

உன்னடியார் வழி மொழியாது

உலகயிலின்பமே இன்பமென

உண்டு உடுத்து உறங்கி திரிந்து 

உடல் இடு காடு போகுமுன்

உடுக்கை ஒலி எழுப்பி யென் செவியில்

உன் மந்திரமதை ஓதிடாயோ

[11:00, 15/05/2025] Radha singaperumal Gayathri: "_"தன்னையறியானை 

பொன் மேனியனை

முன்னம் வினை முற்றுமறுத்தானை

அன்னையாய் வந்து பாலளித்தானை

மண்ணிலே பிறந்து மடிவதற்குள் நம்

இனியவனை நெஞ்சே நீ நினையாயோ

[11:00, 15/05/2025] Radha singaperumal Gayathri: "_"உன் மெய்யடியார் போல்

உள்ளமது உருகாமல்

செவியும் உன் புகழை கேளாது

நாவும் சிவாய எனாது

காலமும் வீணே கழிய 

கணநேரம் உன் திருநடனம்

கண்ட பின் ஈர்த்தெம்மை ஆண்டு

கழலிணை பற்றிடருள்வாயே

கனகசபையில் உறையும் கோவே

[11:00, 15/05/2025] Radha singaperumal Gayathri: "_"அமரரும் அறியா நின்னை

அவனியில் பிறந்து

தமரரடியே பேணும் நானறியேன்

திருவருளின் வழி நின்று

தினமுன்னை தொழுமெனக்கு

தூக்கிய திருவடி,வீசிய கரம்,

செஞ்சடை விரிய

அதில் இளமதி சூடி

நீயே வந்து அருள்விப்பாய்

விமலனே விடைபாகா

[11:01, 15/05/2025] Radha singaperumal Gayathri: "_"ஓரணுவாய் உருத்தெரியாது

கருவறை புகுந்த என்னை

கண்ணிமை போல் காத்தக்

கயிலைமலை மா வள்ளலே 

பூதங்கள் ஐந்துடன் புவி சார்

உறவும் சேர வழித்தடம் பிறழ

சேராயிடம் புகுந்து சரியை

கிரியை மறந்தேன் ஐய்யனே

இனி செய்வதறியா கடையேனை

காவாது இருத்தல் உனக்கழகோ

காடு கொண்ட கருணை வள்ளலே

[11:01, 15/05/2025] Radha singaperumal Gayathri: "_"துன்ப மிகு வாழ்வில் 

துவண்டும் வாடுமெனக்கு

அஞ்சேலென அபயம் 

காட்டும் நின் கழலிணையை

கண்டும் உன்னிடம் சாராது 

மீண்டும் நாய் போல் திரிய

திருந்தா சீவன் என எண்ணி

இருந்திடேல் பிறபறுக்கும்

இளமதி சூடிய இனியோனே

[11:02, 15/05/2025] Radha singaperumal Gayathri: "_"நாறுமிவ் வுடலில் 

நவதுளையிட்டு 

நாதனே படைத்தாயெனை

நானி லத்தில்


நாவின் ருசிக்கே

நல்லுணர்வு இட்டு

நன்மை தீமை அறியாது

நாட்களை கழித்தேன்


நல்லடியாரை அணுகாது

நம் சிவாயம் ஓதாது 

நற்செயலும் செய்யாதெனை

நமன் அணுகும் போது

நாயகனே காப்பதுன்

நற்குணமேயன்றி யாதோ

நானறியேன் நாயகமே

[11:02, 15/05/2025] Radha singaperumal Gayathri: "_"வந்த இடமும் நானறியேன் இனி

போக்கிமிடமும் நானறியேன் 

மெய் பொருளும் நானறியேன்

நாளும் ஒரு நாடகம் கண்டு

நடித்து ஓயலுற்றேன் ஐய்யனே

காரிய காரண கருப் பொருளே!

நீயறிவித்தாலன்றி அறியலேன்

நிமலனே பொய்யுலகில் வாழும்

யானும் என் பூசையும் பொய்யே

மெய்யே நின் பொன்னடி கண்ட

எனை ஆட்கொண்டு அருளுகவே

[11:03, 15/05/2025] Radha singaperumal Gayathri: "_"நால்வரின் துதியையும்  பாடி

நர்த்தனமும் ஆடி சரியை கிரியை

செய்தும் காணுதற்கரியவனே!

அடியார் திருக்கூட்டமும்  கண்டு

அவரின் அடி  தொழுதும்

எண்ணுவதற்கு எட்டா  கழலிணை

எண்ணிறந்தடியவர் தொழுதவர்

உள்ளமதில் உறைகின்ற உமாபதியே 

காலன் வருமுன் எனக்கருளாயோ

கந்தவேளின் தந்தை கயிலை

நாதனே சிவஞான செம்பொருளே

[11:03, 15/05/2025] Radha singaperumal Gayathri: ,

"_"உன்னையன்றி எனையறிபவன்

எவருண்டோ இவ்வையகத்தே

உள்ளமதில் கள்ளத்தனம் புகுந்து 

வெள்ளமென ஆசை பெருக

உன்னடி இடம் சார வந்தேன்

உன்னடியார் போல் வேடமேற்று

நாடகமேயானாலும் கைவிடுவது

அழகல்ல பொன்னம்பல அரசே

காவாய் கனக திரளே போற்றி

[11:04, 15/05/2025] Radha singaperumal Gayathri: "_"அறியாமல் செய்த வினை

ஆயிரமாயிரம் இருக்க 

மீண்டும் விழும் விட்டிலைப் போல்

வினையெனும் மாயை வலையில்

வீழ்ந்து தொடர் வினை புரியுமெனை

விடாது தொடர்ந்து காக்க வந்த

விண்ணவர் கோவே நின் கருணை

விண்ட இயலுமோ விண்ணவனே

[11:04, 15/05/2025] Radha singaperumal Gayathri: "_"திருமுறையின் பெருமைதனை

ஒரு முறையேதும்  அறிந்திலேன்

நான் மறையும் நானறியேன்

முறையில்லா வாழ்வு கொண்டேனை

வரையில்லா கருணைக்காட்டி

தறி கெட்டு நானழியுமுன் ஐய்யனே

நெறி நிறை மாந்தருடன் கூட்டி

சிவ நாமத்தை உபதேசித்துன்

சிவ புரத்தில் சேர்த்திடாயோ 

சிற்றம்பல நாதனே சிவகாமி நேசனே

[11:05, 15/05/2025] Radha singaperumal Gayathri: "_"பதி பாசம் பசுயென ஏதுமறியா

பாவியேன் உய்ய வந்த செம்மலே

அடியார் பலரின் பனுவல் கேட்க

அவர் பின் சென்று ஆண்டனை

இது நீ புரிந்த திரு விளையாடல்

நானும் நின்னடியார் போல் உனைப்

பாட ஆசை கொண்டேன் ஐய்ய!

கொச்சை மொழி‌ எனதினை

இச்சையுடன் கேட்டு அருளாயோ

[11:05, 15/05/2025] Radha singaperumal Gayathri: "_"பதி பாசம் பசுயென ஏதுமறியா

பாவியேன் உய்ய வந்த செம்மலே

அடியார் பலரின் பனுவல் கேட்க

அவர் பின் சென்று ஆண்டனை

இது நீ புரிந்த திரு விளையாடல்

நானும் நின்னடியார் போல் உனைப்

பாட ஆசை கொண்டேன் ஐய்ய!

கொச்சை மொழி‌ எனதினை

இச்சையுடன் கேட்டு அருளாயோ

[11:06, 15/05/2025] Radha singaperumal Gayathri: "ஆணவத்தால் அறியிலேன்

ஆடல் அரசே! அம்பல வாணனே

இடரென தெரிந்தும் இப்புவியில்

உழலுமெனை உன்னடியாருடன்

கூட்டியும் மெய்வழி காட்டியும்

அருளுவபர் எவரோ நானறியேன்

இனியும் ஒரு கருவழி காணாது 

இனிதே வந்திடாய் என்னகத்தே

குடியும் புகுந்திடாயோ குணக்குன்றே

[11:06, 15/05/2025] Radha singaperumal Gayathri: "_"அசையும் அசையாப் பொருளில் நீ

அனைத்திலும் நீ  இருக்க உனைக் 

காணா கண்கள் கோடி கோடி..

உனைக் காண நின்னருளின்றி

அயனும் மாலும் தோற்றனரே

அன்பெனும் ஊற்றுடையோரின்

உளமதில் உறை மெய்யனே உனை

காண எடுத்த பிறவியோ எண்ணிலா

இப்பிறவியும் வீணாகுமுன்னே

ஆட்கொளாயோ ஆடல் அரசே

[11:07, 15/05/2025] Radha singaperumal Gayathri: கண்டவர் உள் மகிழ் கோவே

விண்டவ ரெவருமிலர் நின்னை

வண்டு மொய் கொன்றை மாலை

கண்டத்திலாட அரவமும் அசைந்தாட

அண்ட சராசரமும் அசையுமழகினை

கண்டு உள் மகிழ்ந்து உவக்கும் 

தொண்டர் தம்முள்ளத்துறை தொன்மையனே

பண்டு எம் வினையறுத்திடாய்

மீண்டும் பிறவிசுழல் சாராமே

[11:08, 15/05/2025] Radha singaperumal Gayathri: "_"போற்றுதற்குரிய பொருளே

போற்றவும் ஏற்றவும் அறியேன்

போக்கிடமு மில்லா எந்தனக்கு

போற்றும் வழியினை கூறுவாய்

கரிக் குருவிக்கு உபதேசித்த

கருணை மாகடலே எந்தனுக்கு

கருவிகள் ஒடுக்கும் கருத்தினை

கருணை கொண்டு அருளுகவே

[11:08, 15/05/2025] Radha singaperumal Gayathri: "_"முழுதும் அறியா வொண்ணா 

முழுப் பொருளே முன்மைக்கும்

முன்மையனாய் தோன்றியும்

தோன்றா விழுப்பொருளே

காண வொட்டா கற்பகத் தருவே

கல்லுக்குள் ஈரமாய் உறை ஈசனே 

சொல்லுக்கு எட்டா தூமணியே

விளங்கியும் விளங்காப் பொருளே

வந்தெனக்கு நீயே காட்டிடாய்

அல்லேல் உனையறிவது எங்கனமே

[11:08, 15/05/2025] Radha singaperumal Gayathri: "_"பஞ்சமா பாதகம் புரியும்

வஞ்சகரோடு கூடியும்

வன் செயல் புரிந்தும்

வாழும் காலத்தில்

சிவனடியாருடன் சேர்ந்து

சிவனை வணங்காத 

கல் நெஞ்சே இனியேனும் நினையாயோ நம் சிவனை

[11:08, 15/05/2025] Radha singaperumal Gayathri: "_"அல்லல் நிறை அகிலத்தில்

ஆணவத் தாலுனை மறந்து

இவ்வுலகில் உழலுமெனை

ஈசேனே எங்கள் சிவகாமி நேசனே 

உந்தன் கழலிணைக் காட்டியும்

உண்மை யாதென அறிகிலேன்

உடலும் வீழுமுன் உணர்த்திடாய்

மாசறு சோதியே என் மாணிக்கமே

[11:09, 15/05/2025] Radha singaperumal Gayathri: "_"பரிதியே!  இருளிணை அகற்றி

பாரினி லொ‌ளிதந்த ருளும்

ஆரியனே! 

என்னகத் திருளினை

அகற்ற வைத்திடவே நின் பதத்தை

அஞ்ஞான மெனும் இருளும்

அகலுமே நின்னருளால்

நீக்கமற நிறைந்திருக்கும்

நின்னை யன்றி 

யாரே யுளர் அய்யனே!

என் அம்பலத்தரசே

[11:09, 15/05/2025] Radha singaperumal Gayathri: தொல்லை நிறை மாய உலகில்

பல்லை இளித்து 

பாசாங்கு காட்டி

இல்லை இல்லை யென திரியுமெனை

எல்லையில்லா கருணைக் கடலே

முல்லை யொத்த புன்

முறுவலாள் அன்னை

சிவகாமியுடன் வந்து

கல்லையொத்த என் நெஞ்சினை கரைத்திடாயோ

தில்லை நடராசனே சிவகாமி நேசனே

[11:10, 15/05/2025] Radha singaperumal Gayathri: "_"சேரா இடம் சேர்ந்து

தேரா செயல் புரிந்து

சேற்றில் விழுந்து கிடந்தேனை

ஊற்றாக பெருகுமின் அன்பால்

பற்றும் பாசமும் எனை தழுவாது

புற்றாக வளருமென் வினைதனை

வேரறுத்த வித்தகா உனைப் போல்

வேறொரு தெய்வம் காணேனே

[11:10, 15/05/2025] Radha singaperumal Gayathri: "_"கங்கையுடன்  மங்கை உமையை

இடப்பாகம் கொண்ட

இமையவா போற்றி 

உவமைக்கு ஒவ்வாத

முதல்வனே போற்றி அத்தனே போற்றி 

அரனும் அயனும் தேடும் தேனே போற்றி 

கரம் தூக்கி சென்னியில் வைத்து

சிரம் தாழ்த்தி என்றும்

உன் சீரடி தொழுக 

வரம் அருளுகவே 

ஏழ் பிறப்பிலுமே

[11:10, 15/05/2025] Radha singaperumal Gayathri: "_"வாதங்களே புரிந்த எந்தனை

ஏதங்கள் அறுத்திட்டு இங்கு

ஏற்று ஆண்டு கொள்ளாய் 

பூதங்கள் ஐந்தின் தலைவா

பாதங்களைக் காட்டி அருளும்

நாதனே தில்லை நடராசனே

என் சொல்ல நின் னருளினையே

[11:11, 15/05/2025] Radha singaperumal Gayathri: "_"இவ்விடம் அவ்விடமென திரிந்தும்

உன் எழில்முகம் கண்டிலேன்

எவ்விடமென வினவ காட்டினரே

உன் மெய்யடியார் தம் மக்களும்

உறைவிடம் என்னுள்ளே என்றே

வியந்து காண தலைப்பட்டும்

வித்தகா கண்டி லேன் நின்னை

நின்னருள ன்றி காண்பதும்

அரிதென அறிந்து கொண்டேன் 

அயன் அரி காணா அண்ணலே.

[11:11, 15/05/2025] Radha singaperumal Gayathri: "_"துன்பமிகு உலகில் உழன்றாலும்

இன்பமே அள்ளித் தரும் இனியனை

பொய்யா விளக்கேற்றி உடல்

மெய் விதிர்த்து நெக்குருகி

கண்ணீர் மல்க முக்கண்ணனை

அவன்னடியார் கூறும் வண்ணம் 

தொழுதிடாயோ என் மனமே

[11:12, 15/05/2025] Radha singaperumal Gayathri: "கால் போன வழியில் நடந்து

காலமதை வீணே கழித்திட்டாய்

காலன் வரும் பொழுதுமாச்சு

கண்ணுக்கு கண்ணான முக்

கண்ணனை கணமேனும் 

நினையாது தொழாத‌ நெஞ்சே

இனியேனும் நினையாயோ 

நஞ்சுண்ட நாதனை என்னெஞ்சே

[11:12, 15/05/2025] Radha singaperumal Gayathri: "_"செத்தார் போல் திரியும்

சீரடி யாரைக் கண்டேன்

சிந்தை பிறழாது எப்போதும்

சிவ சிவ என்றிடக் கண்டேன் 

சிந்தை மகிழ சிவபுராணம்

ஓதி மகிழக் கண்டேன் 

அவ் வடியாரைப் போன்றே 

பொய்யா விளக்கேற்றி

உனைத் தொழுதேத்திட

அருளாயோ புண்ணியனே

[11:13, 15/05/2025] Radha singaperumal Gayathri: "_"சிவனை நினையாது

சிற்றம்பலம் புகாது

சிவனடியாருடன் கூடாது

சிற்றின்பத்திலே திளைத்து

சீக்கில் கிடந்துழமுன் 

சீதப்புனலாடி சிற்றம்பலம் பாடி

சீரார் கழலது அவனது பற்றிட

சிவபுரம் அங்கே சேர்ந்திடலாமே

[11:13, 15/05/2025] Radha singaperumal Gayathri: "_"தன்னடியாரை விட்டகலாத

தண்மதி சூடியவனை

தாமரை மலர் தாள் காட்டி

தன்னையே மறந்தாடும் 

தன்னிகரில்லா தியாகேசனை

என் நெஞ்சே நீ  நினையாயோ

[11:13, 15/05/2025] Radha singaperumal Gayathri: "_"நொடியின்பமே எனினும்

நெடுந்தூரம் உடல் நோக

சுடும் வெய்யிலில் நடந்து 

கொடு வினையோருடன் கூடி

வெம்பாவங்களைச் செய்து

கூத்தவா உனை மறந்தேனை

ஓடி வந்து கூற்றுவன் வருமுன்

ஆடலரசனே எனை ஆண்டு கொள்ளே

[11:14, 15/05/2025] Radha singaperumal Gayathri: "_"வானளந்த பிரம்மனும் காணா

வார்சடை வளர்மதியோனை

வணங்காத நாளும் நாளல்லவே

வஞ்சம் நிறை பாழுலகில்

மயங்காது சீரோன் கழல் பற்றி

தயங்காது சிவனது சின்னமிட்டு

சித்தமே சிவமாவது எப்போதே

[11:14, 15/05/2025] Radha singaperumal Gayathri: "_"ஆக்குவாய் காப்பாய்

அழிப்பாய் எம் அண்ணலே

அடியாரு ள்ளத்துறை வாழ் ஈசனே

என்னுள்ளும் உறை ஈசனே

திருப் பெருந்துறை வாழ் நாதனே

அறிந்தும் அறியாமலும் 

கொடு வினையே புரிந்து திரிந்தேனை

விடை மேலேறி கடை நாளில்

வந்து காப்பது நின் கடனே

[11:15, 15/05/2025] Radha singaperumal Gayathri: பொய்யனே ஆயினும் நான்

உய்யவே  விண்ணிறங்கி வந்த

அய்யனே நின் கருணைதனை

பையவே இங்குணர்ந்து பக்தி

செய்யவே நின்னடி புகுந்தேன்

கயமையே பூண்டெனக்கு

மெய்யேனே அருளுவது எவ்விதமே

[11:15, 15/05/2025] Radha singaperumal Gayathri: "_"பூதங்கள் ஐந்தை கட்டியும் மாயா ஜால 

வித்தைகளை கற்றும் 

மண்ணிலே புதைந்து காற்றையே உண்டு

நீரிலும் நெருப்பிலும்

நடந்து‌செய்யும் கற்ற கலைகளும்

கைகொடுக்குமோ காலன்‌ வரும் அந்தக்

கடை நொடியில் என்ன

செய்வாய் என் மனமே ஈசன் இணையடிகள்

போற்றுக போற்றுகவே

[11:15, 15/05/2025] Radha singaperumal Gayathri: "_"இந்நானில நாடகத்தில்

நல்லறிவுதனை புகட்டவே

நாயகனாய் வந்தெமக்கு

மெய்ஞானத்தை ஊட்டிட

கல்லால நிழலிலமர்ந்தும்

கணக்கில்லா கோலங்களும்

காட்டிய விந்தையை 

நின் அடியாருக்கு அறிவித்ததும் நின்

செயலன்றி வேறு

யாதுமுளதோ அடியார் 

அறிந்ததை ஈண்டிங்கு

உரைக்கவும் யாம்

வேண்டுவது  நின்னருளே

[11:16, 15/05/2025] Radha singaperumal Gayathri: "_"நின்னருளே எங்கும் நீக்கமற நிறைந்திருக்க

இன்னருளே புரிந்து வீணே நாய் போல் திரியுமென்னை

ஏறெடுத்துப் பாராயோ 

அருள் புரிய மன்றில் 

நின்றாடும் தேவன் உன்னைக் காணாது

வீணே பொழுதினைச் சுருக்குமெனை இங்கு

ஈர்த்தெனை ஆண்டு 

அருள் புரிய உன்னை அன்றி வேறு எவருளரோ

[11:16, 15/05/2025] Radha singaperumal Gayathri: "_"கடல் கொண்ட நஞ்சை

உண்ட விமலனை காணா

கண்களும் கண்களில்லை

பண்ணிசைத்து அவனைப்

பாடா நாவும் நாவில்லை 

அவனடி சேரா நாளும் வீணே

அறிந்தும் என் நெஞ்சமே 

செய்வதேனோ வஞ்சமே

[11:17, 15/05/2025] Radha singaperumal Gayathri: முன் பின் எனும் இரு வினையும் போக்கி

சிவஞானமும் தந்து 

புகழோடு செல்வமும் 

நெஞ்சில் வஞ்சமில்லா அன்பை தந்தருளும்

 தயாபரனை மறந்து

மாயா‌ உலகில் மயக்கமுற்று தன்னையே

மறந்து திரிந்தேனை

தாய் போல் எனையாட் கொண்ட தயாபரனே

என்னே நின் கருணை

[11:20, 15/05/2025] Radha singaperumal Gayathri: "_"முத் தேவரும் போற்றும் முதல்வனே

அத்தனே அடியவர் பின் செல்லும்

பித்தனே  பெருந்துறை வாழ் ஈசனே

எத்தனின் சித்தமலம் யறுத்தெனை

சிவமாக்கி ஆண்டு கொள்ளே

[11:21, 15/05/2025] Radha singaperumal Gayathri: "_"வந்தாய் பல்லுயுர் பேணவே

தந்தாய் சிவஞான போதம்

எந்தாய் தண்மதி சூடியவா

நந்தாத கொழுஞ்சுடரே எங்கள்

சிந்தாமணி சிற்றம்பல நாயகனே

[11:21, 15/05/2025] Radha singaperumal Gayathri: "_"அயனும் மாலுமறியா நின்னடி

தனை நீயே காட்டி ஆட்கொண்ட 

விந்தையை விண்ட இயலுமோ

இயலுமே நின்னருள் கொண்டே

அறியும் பொருளும் அறிவதும்

அறிய வைப்பதும் நீயே அன்றி

வேறெவரு முண்டோ வேத நாயகனே

அறிந்ததும் பேசா நிலை பிறவாதோ

[11:21, 15/05/2025] Radha singaperumal Gayathri: "_"கோள் வினைப் போக்கும்

குன்றா தனமும் தரும்

கலையாத கல்வியும் செல்வமும்

அடியார் தம்முடனும் கூட்டி

எல்லா இன்பமும் அருளி

இறுதியில் ஈசனடி சேர்க்கும்

கணமும் சிவாய நம என்றிடவே

[11:22, 15/05/2025] Radha singaperumal Gayathri: "_"மாந்தர் தம் துயர் நீக்கவே

மண்ணிலே வந்து பல வேடமே பூண்டு வாதிட்டு வசை கேட்டு 

அவர் கை  மொத்துண்டு 

அடியார் தம் துயர் துடைக்க அம்மையாய்

அப்பனாய் ஆசானாய் வந்துதித்து 

பிறவிப் பிணி தீர்க்கும் பித்தனே 

நின்னை பேசா நாளும் 

பிறவா நாளே

[11:22, 15/05/2025] Radha singaperumal Gayathri: "_"தொய்விலா வாழ்வுண்டாம்

நின்னடி சேர்ந்தார்க்கென 

அறிந்து உனதடி சேர்ந்தெனக்கு

பேசா மொழி உபதேசித்து 

தூங்கியும் தூங்கா நிலை அருளி

துன்னிய இருளினி கவ்வாது

பின்னும் பிறவி தொடராது

காவாய்  கைலை வாழ் அரசே

[11:23, 15/05/2025] Radha singaperumal Gayathri: "_"பந்த பாசத்தில் வீழ்ந்தேனை

பாசத் தளைதனை யறுத்தே

மாசற மடைமாற்றம் செய்த

செல்வமே சிவ பெருமானே

பெருந்தவர் உள்ளக் கோவிலிலிருக்கும்

குணக்குன்றே யான்

என்ன புண்ணியம் செய்தேன் அறியேன் என்  அம்மையப்பனே

[11:23, 15/05/2025] Radha singaperumal Gayathri: "_"யானே  எனது எல்லாமென 

இறுமாப்புடன் இருந்தேனை

இயக்குவது யாவுமே நின் செயலென

உணர வைத்து உளம் புகுந்து 

கணக்கில்லா கோலம் நீ காட்டி

பிணக்கினைத் தீர்த்த பிஞ்ஞகனே

நின் பொன்னடி போற்றி போற்றி

[11:24, 15/05/2025] Radha singaperumal Gayathri: "_'விண்டுவதற்கு அரியோனே

விண்ணவர் போற்றும் அரனே

வேதங்கள் ஏத்தும் விழுப்பொருளே

ஏதங்களறுக்கும் குணக்குன்றே

துதியென பிதற்றும் இப்பித்தனை

ஈண்டிங்கு ஆண்டுகொள்ளே

[11:24, 15/05/2025] Radha singaperumal Gayathri: "_"மறுத்தேன் நின் திருப்பெயரை உரைக்க

வெறுத்தே நின்னடியாரை

கருத்தில் சினம் கொண்டேனை

பொறுத்தே உன் வசமாக்கிய

பெருந்தகையோனே உன்னை

அன்றி வேறொரு தெய்வம் இங்கு

பேணேன் இனி  இவ்வையகத்தே

[11:25, 15/05/2025] Radha singaperumal Gayathri: "_"எழுத்தறிவில்லா ஏழையேனுக்கு

கருத்தறிவிக்க உனையன்றி

எவருண்டோ ஏகம்புத்துறையோனே

ஏழ் பிறவி எய்தியும் கண்டிலேனுனை

இப்பிறவி தப்ப எப்பிறவி வருமோ

கடைத்தேறுவது எங்கனமே

[11:25, 15/05/2025] Radha singaperumal Gayathri: "_"தொண்டேதும் புரியாதெனக்கு

 மண்டும் பவநோய் தழுவி

மீண்டும் பிறவாதிருக்க நீல

கண்டா  நின் திருவடி 

கண்டுமு ளமுருகி மெய் விதிர்க்கும் 

வழி ஒன்றை யுபதேசிக்க வந்தருளே

[11:25, 15/05/2025] Radha singaperumal Gayathri: அரிதிலும் அரிதான அரனே 

அறியவொண்ணா பரனே

அறிய முற்பட்டும் கண்டவரில்லை

அறிந்தவரோ தம்மகத்தில் கண்டு 

அறிந்தபின் தம்முள் அமர்ந்தனரே

[11:26, 15/05/2025] Radha singaperumal Gayathri: "_"இம்மையில் எமையாட் கொண்டு

மறுமையில் வினை அணுகா

வண்ணம் காக்க வந்தனையோ

வண்டமலர் சூடிய தென்முகமர்

ஆரியனே கைமாறு ஏதுமறியா இச்சீவனை

ஏற்றருளுவாயே

[11:27, 15/05/2025] Radha singaperumal Gayathri: "_"பொன்னார் மேனியனே

தென் பாண்டி நாட்டானே 

உன் பொன்னடி தொழ 

என் சித்தமலம் நீக்கி 

மற்றும்  மலங்கூடா வண்ணம்

மந்திரமொன்றை ஓதி

ஏமப்பெருந்துயில் கொண்டோனை

அரிதுயிலி லாழ்த்தி அருளுகவே

[11:27, 15/05/2025] Radha singaperumal Gayathri: "_"உயிரின் பால் அன்பு கொண்டு 

உய்விக்க வரும் அண்ணலே

நின் கருணையை கண்டு

நினை வாழ்த்த வகையறியாது

ஊமை கண்ட கனவினை போல்

சொற்களின்றி தலைபடுவேனை

ஈர்த்துன் பதமதில் இருத்திடாயோ

[11:27, 15/05/2025] Radha singaperumal Gayathri: தடையின்றி அருள் புரியும் 

கொடை வள்ளலே செந்தழல் மேனியனே செஞ்சடையோனே

கடல் நஞ்சை உண்டு

கருணையால் உயிரனைத்தையும்

காக்கும் உத்திரகோச மங்கைக்கரசே 

கண்டிலேன் 

உனை அன்றி வேறு தெய்வம் எங்குமே

[11:28, 15/05/2025] Radha singaperumal Gayathri: உன்னடி தொழுமடியார்

பின் சென்று அவர் குறை

தீர்க்க பிச்சையும் ஏற்றவனே

நின்னை யொத்த தெய்வம்

வேறேங்கும் கண்டறியேன்

விடையேறும் வேத விழுப்பொருளே

கடையைனேனையும் கருணையால் ஆண்டு கொள்ள தடையுமுண்டோ

[11:28, 15/05/2025] Radha singaperumal Gayathri: "_"அடியார் வசமாகி அவர் தம்

அகத்தில் குடிபுகுந்தோனை

புறத்தில் தேடியலைந்த நானுனை 

புண்ணிய வசமாகி செவியுற்று

நின்னடி நிழலிலே தஞ்சமென

வந்துமுனை தொழும் வகையேதும்

அறியாத மந்தன் எனக்கு நீயே

அந்தணனாக வந்து பேசா மொழி

உபதேசித்து ஆண்டு கொள்ளே🙏சிவாயநம 🙏

[11:29, 15/05/2025] Radha singaperumal Gayathri: "_"ஞானியரும் தானறியானை

ஊன் உடம்பிலும் உறைபவனை

கண்மூன்றும் கபால மாலையும்

தண்மதி சூடிய செஞ்சடையோனை

விண்ணோர் கண்டு வியந்த 

செந்தழல் மேனி சிவனை

சிந்தையில் வைப்பது நம் கடனே

[11:29, 15/05/2025] Radha singaperumal Gayathri: "_"அடியாரு ள்ளத்துறை அருட்புனலே

அவர்தம் அம்பகத்தின் ஒளி 

என்னுள் பாய்ந்து என்னுள் கலந்து

நினைவில் நீங்காமல் உறைந்து 

தொல் வினையும் துகளாகி 

என் தொடர் பிறவித் தளையறுக்க

நின்னடி சேர்ந்தேனை ஆட்கொள்ளே

[11:29, 15/05/2025] Radha singaperumal Gayathri: "_"பொல்லா டியாரை பொசுக்கி

நல்லடியாரைக் கண்ட களிப்பில் 

நடனமாடும் சிற்சபை நாயகா

நானுமாசை கொண்டேன் நின்னை

கண்டும் பாடியும் அழுதும் தொழுதும்

அனுதினமுன்  நிழலில்

நானிருக்க

தகமையிலா தனயனென்று தள்ளாது

தருகவே புகலிடம் தவறாது சிவகொழுந்தே!

[11:30, 15/05/2025] Radha singaperumal Gayathri: "_"அடியாரை ஆட்கொண்டு

அவர்தமு ள்ளத்துறை ஈசனே

ஆட்கொல்லி  ஆசை வலையில்

அகப்பட்டேனை ஆட்கொள்ள

தடையேதுமுண்டோ சொல்வாய்

உன்னருளின்றி

உனை நினைக்கவும்

இயலுமோ என்னையும்

தடுத்தாட் கொள்ள தாமதமேனோ

[11:31, 15/05/2025] Radha singaperumal Gayathri: தொடர் பிறவியில் வினையாற்றி

படர் கொடி போலாசையை வளர்த்து

இடர் தரும் இழிச்செயல் புரிந்து 

சுடர் விளக்கே உனைத் தொழாது

துயருற்று வாழும் எனக்கு சிவனே

சிந்தையில் நின்று ஆண்டருளாயே

[11:31, 15/05/2025] Radha singaperumal Gayathri: "_"ஊன் உடை உற்றமென வாழ்ந்து

உடல் சரிந்து உயிர் விடுமுன்னே 

உந்தன்r பதத்தில் மனம் பதித்து

அகத்திலுன் திருமுகம் கண்டங்கு

எந்தன் வாய் குளறுமுன் துதித்து

கண்ணீரும்‌ துளித்து ஊற்றாகி

 உன் பொன்னடி தொழ வந்தெனக்கு

உந்தன் செம் மலர்த் தாளினை

காட்டிட இன்னும் தடையேனோ

[11:33, 15/05/2025] Radha singaperumal Gayathri: "_"மானுடம் வியக்களவு மனையும்

கொட்டில் நிறை ஆனிறையும்

மட்டில்லா மாண்பு மிகு மனைவி மக்களும்

ஆயகலைகள் அறுபத்தும்

கற்றுணர்ந்த கல்வியறிவும்

காலன் வந்து நலியும் போது

கடைவழிக்கு உதவாதென உணர்ந்து 

நின் கழலடி சேர்ந்தவனை 

காத்தருள தாமதமேனோ

[11:33, 15/05/2025] Radha singaperumal Gayathri: "_"செந்தழல் மேனியனின்

மந்திரமொன்றை எந்தன்

சிந்தையிலே சிறை வைக்க

தந்திரம் ஒன்றை அறிந்து

புந்தியில் வைத்துப் போற்றிட 

அந்திவரை வழிதனைக் காணேன்

நந்தியே நீ அருள தடையுமுண்டோ

[11:34, 15/05/2025] Radha singaperumal Gayathri: "_"பொய்மைக்கு ஆட்பட்டு பல

மெய்யடியார் போல்

வேடமிட்டு 

பகைமையை 

அகத்தினில் புகுத்தி

தகமையிலா எனக்கருள்வது எங்கனமே என வழி

அறியாது பித்தனைப் போல்

நஞ்சுண்டு நள்ளிரவில் நட்டம் பயின்றாடும் நாதனே நடராஜனே

நின் கருணை தான் என்னே

இயம்பத் தகுமோ

ஏழையறியேனே

[11:34, 15/05/2025] Radha singaperumal Gayathri: இணை பிரியாது நீ இருந்தும் 

துணை தேடி கயவருடன் கூடி 

பிணைக் கைதி பௌலுழன்று

வினைகள் பல செய்தேனை

கோனே எனக்கருள வந்த மாயம் 

என்னென்று புகலுவது நானறியேனே

[11:34, 15/05/2025] Radha singaperumal Gayathri: "_"எத்தொழிலும் ஈனமில்லை‌ யென

உலகோருணர  தென் மதுரை 

வந்திங்கு வந்திக்கென மண்

சுமந்து மரம் வெட்டி வளையும் விற்ற

விளையாட்டினைக் கண்டு வியந்த விண்ணவர் இருக்க 

மண்ணிலே நான்  வீணே சுற்றித் திரிவது 

இழிவன்றோ

[11:35, 15/05/2025] Radha singaperumal Gayathri: பொய்மைக்குப் ஆட்பட்டு 

பகைமையை அகத்தே பூண்டு

தகமையிலா வாழ்வு வாழ்ந்தேனை

உவமையற்ற உமையொரு பாகனே

புன்மை மிகுந்தேனுக் கருளாயோ

[11:35, 15/05/2025] Radha singaperumal Gayathri: அப்பாலும் அடிச்சார்ந்த

அடியாருக்கு அருளும் ஈசா

எக்காலமும் நானுனைத் தொழுதும்

ஏறெடுத்து நோக்காது போனால்

என் விழியும் வழி பிழன்று

ஊழ்வினையும் சேறுமுன்னே

ஆட்கொள்ள ஏது தடையுமுண்டோ

என்னுளுரை ஈசனே இயம்புகவே

[11:36, 15/05/2025] Radha singaperumal Gayathri: "_" அறிவுக்கும் அறிவானவன் நீயென

அறிந்தும் ஒப்ப மறுக்குமென்

ஆறறிவின் ஆணவத்தால்

கட்டுண்டு கர்மங்களின் வழிநிற்க

தொடரும் பிறவித் தளை நீக்க

வருவாய் குருவாக குணக் குன்றே என்

வான்மீகி ஈசனே திருபுரை நாதனே

[11:37, 15/05/2025] Radha singaperumal Gayathri: "_"பழவினையின் தொடரால்

இழிவுச் செயல் ஏகமாய் செய்து

பழிச் சொல் தாங்கி திரிந்தேனைன

பழம் பெருமடியாருடன் கூட்டியெனை

ஈர்த்து இழுக்க தலைப்பட்டது

நின் கருணையன்றி யாதுளதோ

[11:37, 15/05/2025] Radha singaperumal Gayathri: "_"விட்டிலேன் எள்ளளவும் ஆசைதனை

பேசிலேன் நின் அருமை எதனையும்

கேட்டிலேன் நின் 

திருப்புகழை

மட்டில்லா பெருமை யுடையோனே

கெட்டழியுமுன்னே அருளாயோ

திரு வீரட்டானம் வாழ் ஈசனே

[11:38, 15/05/2025] Radha singaperumal Gayathri: "_"சுருதிகளின் வாய் மொழியும்

சொல்லவில்லை 

இறுதிவரை எனைச் சுமக்க உறுதியாய்

எவருமில்லை

கருதியே உன் முன் வந்தென்னை

குருதியாவும் சுண்டுமுன் உந்தன்

கருத்திலே கொள்ள தடையுமுளதோ

பரிதியாய் தோன்றி

ஆண்டு கொள்ளே

[11:39, 15/05/2025] Radha singaperumal Gayathri: விண்ணவரும் உனதடி தேடி

நண்ணியது நாடறிந்ததே

மண்ணிலே நானுமுனைத் தேட

கண்ணிலே பட்டாய் அடியவரின் அகத்தினுள்ளே

[11:39, 15/05/2025] Radha singaperumal Gayathri: என்றும் எங்குமிருக்கும் உனை

குன்றி குறுகி இலக்கணமின்றி

ஒன்றுமறியா நானுன்னை பேச

தலைப்பட்டதில் தவறாகுமோ

[11:39, 15/05/2025] Radha singaperumal Gayathri: உண்டும் உடுத்தும் எந்நேரமும் 

இம்மண்ணில் களித்திருந்தேனை

நல் வண்ணம் வாழ வகை செய்ய

எண்ணமே உனக்கில்லையோ

இம்‌மண்ணிலுத்த  சுந்தரருக்குப் பண்

செய்யருளுயவா எந்தனை

கண் கொண்டருள தாமத மேனோ

[11:40, 15/05/2025] Radha singaperumal Gayathri: "_"கருவிலுதித்த நாள் முதலாய்

கண்ணிமைப் போல் காத்து

கர்மங்களை யறுத்தாண்ட ஈசனே

கருணை நினதை என் சொல்ல

[11:40, 15/05/2025] Radha singaperumal Gayathri: "_"

மேன்மை நினதை கேட்டிலேன்

தொன்மை மிகு பெருமை தனை

புன்மை கொண்ட இவ்வாயினால் 

நோன்மை நினதை புகழுவது எங்கனமே

[14:14, 15/05/2025] Radha singaperumal Gayathri: "_"அகண்டமாய் நிறைந்தவா! ‌நீ

பூண்ட வேடம் எண்ணவும் இயலுமோ

வேண்டித் தொழுத அடியவருக்கும்

வேண்டாத சீவனுக்கும் தந்தையும் தாயினும்

பெரிய தயாநிதியே

பேயினும் கொடியோன் எந்தன் 

மாயா மலம் நீக்கி ஆண்டருளே

உன்னையல்லாது என்குறையை

யாரிடம் சொல்வேன் ஐய்யனே!

[14:14, 15/05/2025] Radha singaperumal Gayathri: 


விரிசடையோனின் பொன்

கரம் பிடித்த மீனாட்சியின்

வில்லொத்த புருவம்

வல்வினை போக்கும்


கயலொத்த விழியிரண்டும்

கலையாத கல்வியும் நல்கும்

குழலொத்த குரலுடையாளின்

கழலிணை பற்றியவருக்கு


கர்மங்களும் தொலையுமே

பவம் நிறைந்த இவ்வுலகில்

சிவசிந்தனையுடன்  வாழ அவளது

பாதங்களை பற்றிடுவோமே.

[14:14, 15/05/2025] Radha singaperumal Gayathri: அடியாரைப் போல வேடம் பூண்டு

அடியுனது தொழ வந்தெனக்கு  நின் 

அருளைப் பொழிந்திடய் ஐய்யனே

பொருளே பெரிதன வாழுமெனை

அருளுக்கு பணியுமாறு நின்

அடியினை சென்னியில் வைத்திடாய்

நாளும் நானுனை பணியுமாறே

ஈசனே எமையாளும் தில்லை

நடராஜனே சிவகாமி  நேசனே

🙏🙏🙏🙏🪷🪷🪷🪷

[14:14, 15/05/2025] Radha singaperumal Gayathri: வினையறுக்கும் வித்தகனே

 தொழ வரும் எனை தொடரும்

என் வினை தனை என் சொல்ல

வினையினை வித்திடும் சமயம்

வேதியனே தடுத்தாட் கொள்ள

தடையேது கண்டாய் இனியவனே

விடையேறி இக் கணமே வாராய் 

ஈசனே எமையாளும் தில்லை

நடராஜனே சிவகாமி நேசனே

🙏🙏🙏🙏🪷🪷🪷🪷

[14:14, 15/05/2025] Radha singaperumal Gayathri: பால் நிறமொத்த நீறணிந்து

கால் தூக்கி நின்றாடும் உந்தனை

மாலனும் அயனும் தேடிய தேனே

சாலப் பரிந்து பாவியேன் எந்தன் 

ஓலமிடும்  மனதினுள் புகாயோ

ஈசனே எமையாளும் தில்லை

நடராஜனே சிவகாமி நேசனே

🙏🙏🙏🙏🙏🪷🪷🪷🪷

[14:14, 15/05/2025] Radha singaperumal Gayathri: பூரண நிலவிலாடும் புண்ணியா புலிப்பாணி  பதஞ்சலி முனியிருவர் 

பதம் பாட நந்தியும் நாதம் எழுப்ப

பஞ்ச சபையில் சங்கொலி முழங்க

துதி பாடும் சிவகணங்களும் ஆட

தும்புரு நாரதர்  வீணை இசைக்க


தேவாதி தேவர்கள் கண்டு களிக்க

ஆதிரை நாளில் ஆடும் ஆடலரசே

இரு கண்களும் போதுமோ நின் 

இணையில்லா நடனமதைக் காண

இடபாதம் தூக்கிய காரணம் ஏனோ

இடபாரூடனே ஆனந்த நடனமதை 

இன்று காட்டி  எமக்கும் அருள்வாய் 

ஈசனே எமையாளும் தில்லை

நடராஜனே சிவகாமி நேசனே

[14:15, 15/05/2025] Radha singaperumal Gayathri: விண்ணும் நீ மண்ணும் நீ

எண்ணமும் நீ செயலும் நீ

எழுத்தும் நீ அதன் கருத்தும் நீ

ஆனந்த ஆடலும் நீ பாடலும் நீ 

பதமும் நீ அதன் பொருளும் நீ

பாரில் வந்தாடும் பரிதியும் நீ 

பேச்சும் நீ  பேசும் பொருளும் நீ

பேசும் ஆற்றல் தந்தவனும் நீ

பேசா மொளனத்தை போதித்த

தேசுடை செந்தழல் மேனியனே

பேசா கலையும் எமக்கருளுகவே

[14:15, 15/05/2025] Radha singaperumal Gayathri: அலையென திகழ் மனத்தினை

அடக்குமுபாயம் அறிந்திலேன் நின்

அடியார் அவரடியும் தொழுதிலேன்

அழுதால் உனைப் பெறலாமே என்ற

மணி வாசகத்தையும் மறந்த எனை

மடை மாற்றம் செய்து என்னுள் புகுக 

மன்றிலாடும் அகிலாண்ட நாயகனே

ஈசனே எமையாளும் தில்லை

நடராஜனே சிவகாமி நேசனே

🙏🙏🙏🙏🪷🪷🪷🪷🪷

[14:15, 15/05/2025] Radha singaperumal Gayathri: எண்ணம் செயல் இவை ஏதும்

அறிந்திலேன் அவ் வினையின்

விளைவும் அறிந்திலேன் வினை

இயற்றா நிலையும் அறிந்திலேன்

தொடரும் பிறவியின் காரணம் வினையென உன்னடியார் சொல் கேட்டும் வினை புரிந்தே வாழும் இவ்வேழைக்கிரங்கி உனையே 

தொழுது வாழும் வினைதனை

நல்குவாய் வித்தகனே எந்தன்

ஈசனே எமையாளும் தில்லை

நடராஜனே சிவகாமி நேசனே

🙏🙏🙏🙏🪷🪷🪷🪷🪷

[14:15, 15/05/2025] Radha singaperumal Gayathri: மாலயனும் அறியா வொட்டா

மாதொரு பாகன் உனை யறிய 

மாதவமியற்றியும் பயனேது

மனமதை செம்மையாக்கி நின்

மலரடியில் பதித்து சித்தத்தை

மலராக்கி அர்ச்சித்து வழிபட 

மனமிரங்கி அருளாயோ ஐய்யனே

இனி எப்பிறவி வருமென யறியா

எனக்கருள தடையேது கண்டாய்

ஈசனே எமையாளும் தில்லை 

நடராஜனே சிவகாமி நேசனே

🙏🙏🙏🙏🙏🪷🪷🪷🪷

[14:15, 15/05/2025] Radha singaperumal Gayathri: விரும்பி தொழும் அடியாரைப் போல

கரும்பின் சுவையாம் நின் நாமத்தை

விரும்பி மெய் விதிர்த்து கண்ணீர்

அரும்ப என் நாவும் உரைக்காதோ 

இரும்பான என் மனமும் இளகாதா

இருவினைதனை யறுக்கும் எந்தன்  

எறும்புக்கும் அருளிய எறும்பீசனே

நறுங்குழல் நாயகியுடை நாயகனே  

ஈசனே எமையாளும் தில்லை

நடராஜனே சிவகாமி நேசனே

[14:15, 15/05/2025] Radha singaperumal Gayathri: விழித்திருக்கும் நிலையும்

விழிப்பில்லை என அறிந்தேன்

அடியாவருடன் கூடிய பின்னே

அதிசயமே அவரது தூங்கியும்

தூங்கா நிலை கங்காதரனே

விழித்தும் தூங்கி கிடக்கும்

எனக்கருளாயோ அறி துயிலை

யாரே அறிவிப்பர் உனையன்றி

யோகிகளின் தலைவ ஆதி யோகி

ஈசனே எமையாளும் தில்லை

நடராஜனே சிவகாமி நேசனே

[14:15, 15/05/2025] Radha singaperumal Gayathri: அழுதால் உனைப் பெறலாம்

என அறிந்து அழ முற்பட்டும்

அகம் குழைய அழுதேனில்லை

அறியாமையின் கண் அகப்பட்டு

அடியார் வழி மொழிந்தேனில்லை

ஆணவம் வயப்பட்ட கல் நெஞ்சை

கரைக்க வல்லான் நீயே யென

வந்தயெனைக் கண்டு கொள்ளே

ஈசனே எமையாளும் தில்லை

நடராஜனே சிவகாமி நேசனே

🙏🙏🙏🙏🪷🪷🪷🪷🪷

[14:15, 15/05/2025] Radha singaperumal Gayathri: ஈரேழு புவனமுடையோய்

எங்கு இடமில்லை யுனக்கு

காட்டிலாடும் காரணமேனோ

அனலும் புனலும் அரவுமேந்தி 

ஆடும் உனைக் காண தேவரும்

புவியிலிறங்கி தொழுது போற்ற

பெருமை யுனதை உணராத 

பேதை எமக்கு போக்கிடமேதோ

அறியேன் விட்டிடாய் வேதியனே

ஈசனே எமையாளும் தில்லை

நடராஜனே சிவகாமி நேசனே

🙏🙏🙏🙏🪷🪷🪷🪷

[14:15, 15/05/2025] Radha singaperumal Gayathri: புலனைந்தும் வஞ்சனை செய்து

புறம்மே திரிந்து உனை உணராது

வீணே உழன்று திரியுமென்னை 

ஆட்கொள்ள வழி யேததனறிய 

அமர்ந்தனையோ நற் சீடருடன் தென்னவனே! சின் முத்திரை

உந்தனது கண்டு உணர்தோர்

உந்தனோடு கலந்தனர் ஐய்யனே

உணராத இவ்வடியேனுக்கும்

அருளாய் ஆதி அருணாசலனே

ஈசனே உமையாளும் தில்லை

நடராஜனே சிவகாமி நேசனே

🙏🙏🙏🙏🙏🪷🪷🪷🪷

[14:15, 15/05/2025] Radha singaperumal Gayathri: எண்ணில்லடங்கா பிறவி

எடுத்து உனை ஏத்த மறந்து

கண்ணில்லா குருடர் போல 

திரிந்தேனை தென்னவனே

அண்ணுவதற்கரியோனே 

ஆசானாய் வந்து உத்தமர்

மணிவாசகனுக்கு உரைத்த

மொளன மொழியை எனக்கும்

உபதேசித்து ஆண்டு கொள்ளே

ஈசனே எமையாளும் தில்லை

நடராஜனே சிவகாமி நேசனே

🙏🙏🙏🙏🪷🪷🪷🪷

[14:15, 15/05/2025] Radha singaperumal Gayathri: வெள்ளிப்பனி மலையோனே 

உள்ளத்தினுள் ஒளிரும் சுடரே

கொள்ளத்தகு குணக்குன்றே

தள்ளத்தகு வினையின்றி 

.கள்ளமில்லா அன்புகொண்டு

பள்ளத்தில் பாயும் நீர் ஒத்து

தெள்ளத் தெளிந்த மனத்தோடு

அள்ளக்குறையாத பக்தி செய்ய

அருளாயோ இம் மாநிலத்தே

ஈசனே எமையாளும் தில்லை

நடராஜனே சிவககமி நேசனே

[14:15, 15/05/2025] Radha singaperumal Gayathri: மெய்வழி விடுத்து இச்சை மிகுந்து

பொய்வழி நடந்து வெம்பாவமே 

செய்து வாழ்வோனை இங்கு

கருணை மிகுந்து பரிந்து 

காத்தருள கொண்ட உருவம்

கணக்கிலுமடங்குமோ ஐய்யனே

காலமதை வீணே போக்கி வினையே புரிந்து மறுபிறவிக்கு

வித்திடும் எந்தனை

ஆண்டு கொள்ள எவ்வுரு ஏற்பாய் 

நானறியேன்  ஆடலரசே

ஈசனே எமையாளும் தில்லை

நடராஜனே சிவகாமி  நேசனே

🙏🙏🙏🙏🪷🪷🪷🪷🪷

[14:15, 15/05/2025] Radha singaperumal Gayathri: கண்ணுக்கு கண்ணாய் 

இருப்பது நீ என உணராது

காலத்தைக் கழித்தேனை

கருணை கொண்டு எனக்கு

சிவ பதம் அளித்து சிவமாக்க

சிலம்பொலிக்க ஆடுகிறாய்

உன்னைப் போலொரு தெய்வம்

உண்டோ உலகில் அறியேன்

ஈசனே எமையாளும் தில்லை 

நடராஜனே சிவகாமி நேசனே

🙏🙏🙏🙏🙏🪷🪷🪷🪷🪷

[14:15, 15/05/2025] Radha singaperumal Gayathri: குன்றொத்த நறு மலரிணை

குவித்த ர்ச்சித்தும் பயனேது காண்

குஞ்சித  மலர் பாதமதில்  மனம்

குவியாது  புவியில் திரியும் போது 

கூறுமடியாரின் மொழி கேளாது

கோமகனை யறியாது காண்

நெஞ்சே போகாத வழி செல்லாது

அஞ்செழுத்தை மறவாது சொல்

[14:16, 15/05/2025] Radha singaperumal Gayathri: அடங்கா ஆசை அலைகள் 

அலைகழிக்கும் வாழ்க்கையில்

 அறிந்தும் அறியாமலும் 

எண்ணில்லடங்கா செய்த பிழை

எண்ணி எனை தள்ளத் தகுமோ

இறையுந்தன் இணையடியே 

கதியென பற்றிய எந்தனை

கூட்டி வைப்பாய் நின்னடியாருடன்

கல்லுக்குள் ளிருக்கும் தேரைக்கும்

கருணை புரியும் கயிலை நாதனே

என்க்கருள ஏது தடை அறியேன்

ஈசனே எமையாளும் தில்லை

நடராஜனே சிவகாமி நேசனே

[14:16, 15/05/2025] Radha singaperumal Gayathri: அழியும் இவ்வுடல் மீது

அழவிலா ஆசை வைத்து 

உடலுக்காக உழைத்தேன்

உடலுக்குள் உணர்வாகி

உள்ளொளியாகி திகழும்

உன் திரு நாமம் செப்பாது  

உழவாரப் பணி புரியாது 

உன் அடியார் அடி தொழா

என்னுடலும் நினைவும் கெட

கதி நீ யென கழலிணையில்

வீழ்ந்தென்னை காத்திடாய்

வீரட்டானே! வேதியனே 

ஈசனே எமையாளும் தில்லை 

நடராஜனே சிவகாமி நேசனே!

🙏🙏🙏🙏🙏🪷🪷🪷🪷

[14:16, 15/05/2025] Radha singaperumal Gayathri: காணுமிட மெங்கும் நின்றாலும்

கண்டதில்லை நான் நின்னை

காணினும் மனமும் ஒடுங்காது

காட்சிப் பொருளென கண்டேன்

கண்ணப்பனு ன்னை கண்டவர்

கருத்திலே இருத்தி வென்றனர்

காலனை கயிலை வாழ் நாதனே

காலமும் எந்தன் பூவுலகில் வீணே

கழிந்தது இனி யேது செய்வேன்

கருணை கூர்ந்து எனக்கருளாயோ

ஈசனே எமையாளும் தில்லை

நடராஜனே சிவகாமி நேசனே

[14:16, 15/05/2025] Radha singaperumal Gayathri: கல்லெனக் கிடக்கும் என் மனம்

கரைந்துருக வழியறியேன் ஐய்யனே

கடைந்தெடுக்க வல்லவன் நீ என

கழலிணையைப் பற்றிய எனது

கர்மங்களை தொலைப்பாய்

காலனை வென்ற கால சம்ஹாரா

உன்னையன்றி வேறெவருளர்

ஈசனே எமையாளும் தில்லை

நடராஜனே சிவகாமி நேசனே

[14:16, 15/05/2025] Radha singaperumal Gayathri: கண்டேனில்லை நானுனை

கண்டோர் பாடிய பனுவலை

கேட்டும் உணரா பாவி நான்

இன்று பாட தடைப்பட்ட எந்தன்

கர்மத்தளை நீக்கியென் சிந்தை

தெளிவித்து சிவானுபவமதை

எனக்கருளுவாய் ஐய்யனே என்

ஈசனே எனையாளும் தில்லை

நடராஜனே சிவகாமி நேசனே

[14:17, 15/05/2025] Radha singaperumal Gayathri: எண்ணுவதற் கெட்டா எழிலே

விழிக்கு விளங்கா அறியோனே

மொழிக்குள் வாரா இலக்கணமே

உவமைக்கு ஒப்பில்லா மணியே

உலகமேழிலும் நிறைந்தோனே

ஓதுவார் உள்ளமதில் உறையும்

ஒளிச் சுடரே நீ அறிவித்தாலன்றி

யாரே அறிவார் பொன்னம்பலனே

நினையறிய எனக்க ருளாயோ

ஈசனே எமையாளும் தில்லை

நடராஜனே சிவகாமி நேசனே

[14:17, 15/05/2025] Radha singaperumal Gayathri: என்றோ வருமிடருக்கென

எவருக்கும் உதவாது குவித்து

குன்றாக சேர்த்த செல்வம்

இன்று உதவாது போக கண்டு

கொற்றவா நின் கழலிணை

பற்றினேன் இன்று உடும்பென

கூற்றுவன் வரும் முன்னே 

கருணா மூர்த்தனே காத்திடாய்

ஈசனே எமையாளும் தில்லை

நடராஜனே சிவகாமி நேசனே

[14:17, 15/05/2025] Radha singaperumal Gayathri: உண்டென்பர் ஒரு சாரர் 

இல்லை யென்பர் ஒரு சாரர்    அறியவொண்ணா அருளே!  நீ

அறிவித்தாலன்றி அறிவது

அரிதென தெரிந்த எனக்கு 

அருளாய் நின்னருள் பதமே

ஈசனே எமையாளும் தில்லை

நடராஜனே சிவகாமி நேசனே

[14:17, 15/05/2025] Radha singaperumal Gayathri: விரும்பித் தொழும் அடியார் போல்

அரும்பும் கண்ணீர் சொரிந்து 

கரும்பினை ஒத்த நின் நாமத்தை

உருகிப்பாட  வரம் அருள ஏது தடை

இறுகி கிடந்த எந்தன் மனமும் 

உருகி யுன்னடி வீழ்ந்து கிடப்பேனே

ஈசனே எமையாளும் தில்லை

நடராஜனே சிவகாமி நேசனே

[14:17, 15/05/2025] Radha singaperumal Gayathri: ஆயகலைகள் கற்றேது பலன்

மாய பிறவியறுக்க மாளாதென

பேய் நடுவிலாடும் பெம்மானுனை

வாயினால் துதித்து மனதினால் சிந்திக்க

தாயாக வந்துன் தாளிணை தந்தருள்

ஈசனே எமையாளும் தில்லை

நடராஜனே சிவகாமி நேசனே

[14:17, 15/05/2025] Radha singaperumal Gayathri: நிணமும் நீரும் நிறை இவ்வுடல்

கணத்தில் மறையுமென அறிந்தும்

வணங்காது வாழ்த்தாதுன்னை    

பிணமென திரிந்துன் அடியாருடன் 

இணங்காது வாழ்ந்தென்னை 

குணங்குன்றா கருணை வள்ளலே

சுணங்காது  வந்தாண்டு கொள்ளே

ஈசனே எமையாளும் தில்லை

நடராஜனே சிவகாமி நேசனே

🙏🙏🙏🙏🪷🪷🪷🪷🪷

[14:17, 15/05/2025] Radha singaperumal Gayathri: உற்ற துணையும் விட்டுவிட

ஊராரும் உதறி தள்ளி விட

ஊணாகி உயிராகி எந்தன்

கள்ளமிகு நெஞ்சினுள்ளும் 

கழிப்புட வீற்றிருந்து எந்தனை

வெள்ளமென வரும் இடரினில்

காத்தருளுகவே கயிலை நாதனே

ஈசனே எமையாளும் தில்லை

நடராஜனே சிவகாமி நேசனே

🙏🙏🙏🙏🪷🪷🪷🪷🪷

[14:17, 15/05/2025] Radha singaperumal Gayathri: பொருள் பல தேடி கூட்டும் 

வகை பல அறிந்து கற்றேன்

புறத்தே திரியும் ஐம்புலனை

பூட்டும் வகையேதுறியேன்

உள் செல்லும் காற்றின் 

வெளியேறும் வழியுமறியேன் 

என்னை யறிந்தேனில்லை

உன்னையறிய மறந்தேன்

வழியறிய தலைபட்டேனில்லை

விழிமூடுமுன் எனக்கருளுகவே

ஈசனே எமையாளும் தில்லை

நடராஜனே சிவகாமி நேசனே

[14:17, 15/05/2025] Radha singaperumal Gayathri: மாயப் பிறவில் சிக்கி  நான் செய்த

போய பிழையை போக்க உந்தன்

மெய்யடியார் போலவே மெய்யுருகி

தூ மலர்  தூவி செய் வினையாவும்

உனக்கே அர்ப்பித்து உன்னிட்டமே என்னிட்டமென வாழ அருளாயோ 

மாசற்ற சோதி மலர்ந்த மலர் சுடரே 

தேனாரமுதே தென் பாண்டி நாட்டின்

ஈசனே எமையாளும் தில்லை

நடராஜனே சிவகாமி நேசனே

[14:17, 15/05/2025] Radha singaperumal Gayathri: நான் முகன் முதலோர் வானவர்

தொழு மடியினை நானும் தொழுதிட

தொலையிமே என் இருவினையும்

என்றெண்ணி பற்றினேன் இன்று

நறு மலர் கொண்டு பூசிக்கும் லகை

ஏதுமறியேன் கண்ணீர் சொறியேன் அகந்தை புகுந்த  எந்தன் மனதில்

நீ புகுந்து ஆடிடாயோ ஆடலரசே

ஈசனே எமையாளும் தில்லை

நடராஜனே சிவகாமி நேசனே

🙏🙏🙏🙏🪷🪷🪷🪷🪷

[14:17, 15/05/2025] Radha singaperumal Gayathri: பன்னிரு திருமுறை படித்தறியேன்

சென்னியில் நின் பாதம் பதித்திட வணங்கி  நின்றிலேன் அத்தனே

தொழுதவர் மனத்தில் துலங்கிடும்

தூயவனே மாயோன் போற்றும் 

மாணிக்கமே மாயப்பிறப்பறுக்க

நின் பொன்மலரடி சேர்ந்தேனை

காவாய் கயிலை மலையோனே

ஈசனே எமையாளும் தில்லை

நடராஜனே சிவகாமி நேசனே

🙏🙏🙏🙏🙏🪷🪷🪷🪷🪷

[14:17, 15/05/2025] Radha singaperumal Gayathri: சடை முடி நதியோடு மதி சூடி

சுடர் ஒளியென துலங்கு மணியே

தொடரிடர் சூழுலகி லுழமெனை

கொடியிடை உமையோடு கூடி

படை சிவ கணங்களோடு திரண்டு

விடையேறி வந்தென்னை காக்க

தடையேது கண்டாய் தேவாதி தேவ

கடையேனேன் என் கதி நீ அன்றோ

ஈசனே எமையாளும் தில்லை

நடராஜனே சிவகாமி நேசனே

🙏🙏🙏🙏🙏🪷🪷🪷🪷

[14:17, 15/05/2025] Radha singaperumal Gayathri: சிவன்னுன்னை சிறிதேனும்

சிந்தையில் வைக்காத எந்தனின்

சித்த மலமறுத்து சிவமாக்குவாய்

சிற்சபையிலாடும் தேவனே

  

சிறியேன் நானும் மண்ணிலுய்ய

சிவாய நம எனும் மந்திரத்தை ஓத

சிவனே நீயே குருவாய் வாராயோ

ஈசனே எமையாளும் தில்லை

நடராஜனே சிவகாமி நேசனே

[14:17, 15/05/2025] Radha singaperumal Gayathri: புறத்தே கிட்டும் இன்பமதை நாடி

பரத்தின் பெருமைதனை மறந்து

அடியவர் நின் திருவடி தொழாது   

கொடியவரோடு கூடி  நினை

மறந்து எந்தன் வினை கெட அருள்

புரியும் உனை நினையாது

பவத்தில் அவமே புரிந்து வாழும்

எனை ஆட்கொள வந்த அன்ப!

நாடி நரம்பு நடுங்கி ஒடுங்கி

நா குழறும் முன் சிவாய நம என

செபித்து உய்யவே அருளாயோ 

ஈசனே எமையாளும் தில்லை 

நடராஜனே சிவகாமி நேசனே   

🙏🙏🙏🙏🪷🪷🪷🪷🪷

[14:17, 15/05/2025] Radha singaperumal Gayathri: கண்களிரண்டும் காண வேண்டும் 

உந்தன் திருவுருவை எந்தன் இரு

செவிகளும் உந்தன் புகழை மனம்

குளிர கேட்க வேண்டும் அஃதிலா

காண்பது யாவும் காட்சி பிழையும் 

வன் சொல்லன்றோ வான்மீக நாத!

புலன் ஐந்தினை ஆறு கோடி மாயா

சக்திகள் தம் வழி செலுத்த இனி

செய்வதறியா வாழும் என் வினை

தீர்த்து மனமிரங்கி ஆட்கொள்வாய்

ஈசனே எமையளும் தில்லை

நடராஜனே சிவகாமி நேசனே

[14:17, 15/05/2025] Radha singaperumal Gayathri: ஆசை அலைகளில் அகப்பட்ட

எந்தன் நெஞ்சத்தில் நிற்குமோ

நின் திருவுருவமும் திருப்பெயரும்   நீரில் எழுதிய எழுத்தினை ஒத்து

நில்லாது மறையுதே மாமணியே!

ஆயிரம் நாமம் இருக்க ஓர் நாமம்

உரைப்பதில்லை என் நாவும்

வன் சொல்லுக்கும் வம்புக்கும்

ஆளாகி உன் பெருமைதனைப் 

செப்பாது தப்பியதே ஏது செய்ய 

அஞ்சுகிறேன் அம்பல வாணனே

ஈசனே எமையாளும் தில்லை

நடராஜனே சிவகாமி நேசனே

[14:17, 15/05/2025] Radha singaperumal Gayathri: தூ மலர் தூவித் தொழுதறியேன்

சேவிக்கும் முறையும் அறியேன்

கூவி அழைக்கிலேன் உனை 

பூசும் வெண்ணீரைக் காண

கூசும்  எந்தன் மனத்தினை 

உனக்கே ஆட்பட்டு உன்மத்தனாய்

உலகில் திரிந்து மெய்யடியனாய்

வாழ அருள் புரிய ஏது தடையோ 

ஈசனே எமையாளும் தில்லை

நடராஜனே சிவகாமி நேசனே

[14:17, 15/05/2025] Radha singaperumal Gayathri: எங்கும் நிறை என் அமுதே 

என்னுள்ளே ஒளிர் ஒளிச் சுடரே

மாயா இருள் கவ்விய மனத்தில்

கண்டிலேன் நானுனை அய்யனே

உமையாள் உடையோய் உந்தனை

அகமே குழைய அழைத்தாலன்றி

அரிதே உனைக்காண்பதரிது

இறுகி கிடக்கும் என் இதயமதை

குழைத்திடாய் நானும் பிழைத்திடவே

ஈசனே எமையாளும் தில்லை 

நடராஜனே சிவகாமி நேசனே

[14:17, 15/05/2025] Radha singaperumal Gayathri: அடங்கிய ஆசை மீண்டெழக் 

அடக்குமுபாயம் காணேன்

விடங்கொண்டவா காக்கவே

மடமாதை இடங்கொண்டு மதி நதி சூடிய சடையாட  கொடியென பூண்ட அரவும் ஆட எனக்கருள 

யமன் என் முன் வரும் போது எனைக் காக்க தடையேது கண்டாய் 

ஈசனே எமையாளும் தில்லை

நடராஜனே சிவகாமி நேசனேr

[14:17, 15/05/2025] Radha singaperumal Gayathri: உனையன்றி யாரே உளர் அய்யா!

வினைத் தொடரை தொலைக்கவும்

வழியறியேன் என் வினைதனை

உனக்கே அர்ப்பணிக்க அருள் கூலி

தந்து உன்னடியில் சேர்த்திடாய்

அருளாடல் புரியும் அம்பவத்தரசே 

ஈசனே எமையாளும் தில்லை

நடராஜனே சீவககமி நேசனே

[14:17, 15/05/2025] Radha singaperumal Gayathri: குற்றமே குணமாக கொண்டேனை

பெற்றவா கணமேனும் கைவிடேல்

கூற்றுவன் வரும் போது 

கற்ற கல்வி ஏதும் கை கொடாதே

உற்றாரும் உதவாரென யறிந்து

குற்றமற்ற நின்னடி சேர்ந்தேனை

குற்றால நாதனே காத்தருளாயோ

மற்றுமொரு பிறவி உண்டெனில்

பொற்றடி மறவா நிலை தருவாய்

ஈசனே எமையாளூம் தில்லை

நடராஜனே சிவகாமி நேசனே

[14:17, 15/05/2025] Radha singaperumal Gayathri: அல்லல் மிகு உலகில் பிறந்து

அடியேன் செய்து குவித்த பிழை 

அளக்கவும் அழிக்கவு மியலாது 

அழகு  வேல் விழி நங்கை தனை

இடம் கொண்ட உத்திரகோச ஈசா

இன்னலைத் தீர்த்து சிவ சிந்தனை

அளித்தாண்டு கொள்ளாய் அய்யா

ஈசனே எமையாளும் தில்லை

நடராஜனே சீவககமி நேசனே

[14:17, 15/05/2025] Radha singaperumal Gayathri: ஆறு கோடி மாயா சக்திகள் கூடிச்

சூழ்ந்து தம் வசமாக்கும் முன் 

அன்றே பொன்னடி தந்தெனை

ஆட்கொள்ளாத காரணமறியேன்

உன்னருளின்றி சிவ சிவமெனும்

நாமமும் செப்புதலுமரிதே

உன்னருளின்றி அணுவுமசையா 

என  தஞ்சமென வீழ்ந்தேன்

வேண்டத்தக்க நின் பதமதை தந்து 

ஆட்கொள்ளாய் அறுபகையினரின்

பிடியின் வசம் மனமுமாகுமுன்பே

ஈசனே எமையாளும் தில்லை

நடராஜனே சிவகாமி நேசனே

[14:17, 15/05/2025] Radha singaperumal Gayathri: எண்சாண் உடம்பினுள்

வைத்தாய் ஐம்புலனை ஐய்யனே 

அது தொடர் வினை புரிய

விளைந்ததுவே மும் மலமும்

உள் வெளியென இரண்டாகி பிரிந்த மனம் கொண்டு

ஒன்றென திகழும் தெய்வமுனை 

அறியாது சமய வாதம் புரிந்து 

மாயா வயப்பட்ட எனக்கருள குருவாகி குவலயம் தனில்  அமர்ந்தே அருளாயோ

ஈசனே எமையாளும் தில்லை

நடராஜனே சிவகாமி நேசனே 

🙏🙏🙏🙏🙏🪷🪷🪷🪷

[14:17, 15/05/2025] Radha singaperumal Gayathri: கன்றைத் தேடும் பசுவைப் போல

என்றும் உன் பொன்னடி துதித்தும்

ஒன்றும் அறியா இம் மட நெஞ்சில்

மன்றமெனக் கருதி ஆடிடாயோ

குன்றென குணமுடையோய் 

இன்றும் ஏழ்ழுலகு போற்று முனை 

என்றும் மறந்திருக்க அருளாயே

ஈசனே எமையாளும் தில்லை

நடராஜனே சிவகாமி நேசனே

🙏🙏🙏🙏🙏🪷🪷🪷🪷🪷

[14:19, 15/05/2025] Radha singaperumal Gayathri: சுடரொளி ஒளிரும் விழி உனது

மடையனேன் மீது வீழாததேனோ

கடையனேன் கலங்குகிறேன் நீள்

சடையில் மதியும் சூடி சிவனடியார்

படை சூழ வந்து எமக்கருள இனி

தடையேது கண்டாய் அய்யனே

விடையேறி வந்தருளாயோ 

ஈசனே எமையாளும் தில்லை 

நடராஜனே சிவகாமி நேசனே

[14:19, 15/05/2025] Radha singaperumal Gayathri: புழு போன்று புவியில் பிறந்து

உழலாது நின்னடி நிழலில் வாழஷ

மழு மான் கனல் ஏந்திய உனை

கழுமலர் சூட்டி  கண்ணீர் மல்கி

பழுதின்றி நற் சொலெடுத்து பாடி

தொழுதிட துயர் நீக்கும் உனை போல்

 

எழுகடல் சூழுலகில் காண்பதரிதே

ஈசனே எமையாளும் தில்லை

நடராஜனே சிவகாமி நேசனே

[14:19, 15/05/2025] Radha singaperumal Gayathri: பிழைப்பே பெரிதென உலகில்

உழைத்து வாழ்ந்த இவ்வேழையை

அழைத்தென் கல் மனதை 

குழைத்தங்கு அறிவொளி காட்டிய

காளையுடைய சிவ பெருமானே

ஊளையிடும் நாய் போல திரியாது

தாளிணையிலே வைப்பாய்

ஈசனே எமையாளும் தில்லை

நடராஜனே சிவகாமி நேசனே

[14:19, 15/05/2025] Radha singaperumal Gayathri: March 1


"_"

மேன்மை நினதை கேட்டிலேன்

தொன்மை மிகு பெருமை தனை

புன்மை கொண்ட இவ்வாயினால் 

நோன்மை நினதை புகழுவது எங்கனமே

[14:19, 15/05/2025] Radha singaperumal Gayathri: உடல் யாவும்  வெண்ணீறணிந்து

படமாடும் பாம்பும் அணிகலனாகி

படர் கொடி மடமாதினை மணந்து

இடபாகமே தந்து மதி சூடிய உனை


திடமான சிவ சிந்தனை பூண்டு

குடமலர் கொண்டுன்னை பூசிக்க

இடர் தீர்க்க எருதேறி வருவாயே

ஈசனே எமையாளும் தில்லை

நடராஜனே சிவகாமி நேசனே

🙏🙏🙏🙏🙏🪷🪷🪷🪷🪷

[14:19, 15/05/2025] Radha singaperumal Gayathri: முத்தியை நல்கும் முதல்வனை

பத்தியுடன் அகத்தில் வைத்து

அத்தா அனந்தாவென செபித்து

பித்தாவுன்னடி சேர  அருளாயோ


அண்டம் ஆளும் அகிலனை விட்டு

பண்டங்களை குவிக்க பாடு பட்டு

விண்டயிலாத துயர் படுவேனை

தண்டமிட்டு வணங்க அருளாயோ

ஈசனே எமையாளும்  தில்லை 

நடராஜனே சிவகாமி நேசனே

🙏🙏🙏🙏🙏🪷🪷🪷🪷

[14:19, 15/05/2025] Radha singaperumal Gayathri: பலகாலம் பாரினில் வாழ்ந்து

ஒருகாலமும் வணங்காத எனை

இடக்கால் தூக்கியாடும் சிவனே

இருகாலாலுனை வலம் வர அருளாய்

திருமால் போற்றும் தென்னவனே

ஈசனே எமையாளும் தில்லை

நடராஜனே சிவகாமி நேசனே

🙏🙏🙏🙏🙏🪷🪷🪷🪷

[14:19, 15/05/2025] Radha singaperumal Gayathri: பூவில் மணமாய் இருந்து 

பழத்தில் சுவையாய் இருந்து

பக்தருள் அருளாயிருப்பாய்

பவக்கடலை நீந்த வழி வகுத்த

பராபரமே எங்குமிருக்கும் உனை

பாவியேன் உணராதிருப்பதும்

பர்னே இதுவும் உன் செயலன்றோ

ஈசனே எமையாளும் தில்லை

நடராஜனே சிவகாமி நேசனே

[14:19, 15/05/2025] Radha singaperumal Gayathri: இருந்து என்னுள்  இயக்கும் பரனே

இயக்குவது நீயென அறியா எனை

பொருந்தும் வகையில் அறிவினை 

அறிவித்து தாயினும் சாலப் பரிந்து

பிறவி தோறும் எனை தொடரும்

பெம்மானே நின் கருணையை செப்ப

எவரிடம் செல்வேன் உன்னை அன்றி

ஈசனே எமையாளும் தில்லை

நடராஜனே சிவகாமி நேசனே 

🙏🙏🙏🙏🙏🪷🪷🪷🪷

[14:19, 15/05/2025] Radha singaperumal Gayathri: சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்

   வேந்தனைச் செந்தமிழ் நூல் விரித்தோனை விளங்கு வள்ளி

      காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார் மயில்வாகனனைச்

         சாம்துணைப்போதும் மறவாதவர்க்கு ஒரு தாழ்வில்லையே.

[14:19, 15/05/2025] Radha singaperumal Gayathri: சுடரொளி திகழ் ஈசனே உனை

மடல் தாமரை இட்டு வணங்காது 

படுதுயர் படர்ந்த பாரினில் யான்

கொடும் வினையே புரியுமெனை

சுடுகாடு காணுமுன் வினையறுக்க

ஆடலரசே எவருளர்  அவனியிலே

ஈசனே எமையாளும் தில்லை

நடராஜனே சிவகாமி நேசனே

🙏🙏🙏🙏🙏🪷🪷🪷🪷

[14:19, 15/05/2025] Radha singaperumal Gayathri: சுற்றமே பெரிதென எண்ணி

பற்றும் பாசமும் கொண்டு

சற்றும் தளராது உலகில் உழண்டு

தற்பரனுனை மறந்து திரிந்து

தற்பெருமை பேசி மகிழும் எனை

குற்றால நாதனாக வந்தெனக்கு

ஈசனே வாராயோ தில்லை

நடராஜனே சிவகாமி நேசனே

[14:19, 15/05/2025] Radha singaperumal Gayathri: கண்களிருந்தும் கண்டிலேனுனை

வாயிருந்தும் வாழ்த்திலேனுனை

காலிருந்தும் வந்திலேன் நின்னிடம்

ஐம்பொறியும் வலு இழந்து இருக்க

ஐய்ய நினை தொழுவ தெங்கனமே

கடையனேன் எனை காத்தருளே

ஈசனே எமையாளும் தில்லை 

நடராஜனே சீவகாமி நேசனே

🙏🙏🙏🙏🙏🪷🪷🪷🪷🪷

[14:19, 15/05/2025] Radha singaperumal Gayathri: உடல் இளைக்கக் கண்டேன்

உள்ளமும் இளைத்தது ஆனால்

உணர்வு இளைப்பதில்லை ஈசனே

உணர்வில் உலகம் ஊடு உருவ

உனை நினைந்திலேன் இனி

உனையன்றி காப்பவரெவரோ

ஈசனே எமையாளும் தில்லை

நடராஜனே சிவகாமி நேசனே

[14:19, 15/05/2025] Radha singaperumal Gayathri: உற்றார் உலகோர் புகழ் வேண்டி

வெற்றியே வாழ்வென யெண்ணி

பொற்றாமலர் நினதைப் பற்றாது

கற்றோரைப் பணியா கசடனை

கூற்றுக் கிரையாகுமுன் கனிந்தே

குற்றால கூத்தனே அருளாயோ

ஈசனே எமையாளும் அத்தனே

ஐய்யனே உலகம்மை நாயகனே

🙏🙏🙏🙏🪷🪷🪷🪷🪷

[14:19, 15/05/2025] Radha singaperumal Gayathri: எங்கும் நிறை மாதொரு பாகா

பொங்கு கங்கை கொண்டோனே 

இங்கு யான் படும் துயருக்கோர்

எல்லையில்லை எடுத்துரைக்க

முறை யறியா யெனை தாயினும்

சாலப் பரிந்தெனை ஆட் கொளாய்

ஈசனே எமையாளும் தில்லை

நடராஜனே சிவகாமி நேசனே   

🙏🙏🙏🙏🙏🪷🪷🪷🪷

[14:19, 15/05/2025] Radha singaperumal Gayathri: உருத்தெரியாது கருவில்

ஒன்பது திங்களாக இருந்தேனை

காத்து உலகமதை காணச் செய்து 

இன்று சொல்லறியா அல்லில்

அவதியுறும் எந்தனை மறந்து

நின்னடியார் பாட சிவகாமியுடன் 

கை வீசி கால் தூக்கி நின்றாடும்

சிற்றம்பல சிதம்பர ஆடலரசே 

என் சிந்தையில் நின்றாடிடாய்

ஈசனே எமையாளும் தில்லை

நடராஜனே சிவகாமி நேசனே

🙏🙏🙏🙏🙏🪷🪷🪷🪷🪷

[14:19, 15/05/2025] Radha singaperumal Gayathri: மானிட உடலில் மனமதை தந்து

மண்ணுலகில் வாழச் செய்தனை

வந்த காரணமறியாது திரிந்து

வெம் பாவங்களை செய்தேனை

உனையன்றி ஏற்பாரில்லை 

கண்ணுக்கு கண்ணானவா

என் மனத்தினை நின் வசமாக்குக

ஈசனே எமையாளும் தில்லை

நடராஜனே சிவகாமி நேசனே

🙏🙏🙏🙏🙏🪷🪷🪷🪷

[14:19, 15/05/2025] Radha singaperumal Gayathri: ,

மடமை நிறை வாழ்வு வாழ்ந்து

கடையனேன் உனை மறந்தேன்

படையென துன்பமெனைச் சூழு

அடைய முடியா நின் பாதமதை

கடமை உனதென யெண்ணியே

தடையில்லாமல் தந்தருவாயே

ஈசனே எமையாளும் தில்லை

நடராஜனே சிவகாமி நேசனே

🙏🙏🙏🙏🙏🪷🪷🪷🪷

[14:19, 15/05/2025] Radha singaperumal Gayathri: ஈரேழுலகமிருக்க நீ விரும்பும்

இடமோ அடியாரின் உள்ளம் என

அறிந்து நானும் உனை தொழ

என் உள்ளம் புகாது இருப்பதேனோ

உமையொரு பாகா! புகத் தகாத

இடமென தள்ளிடாத ருளாயோ 

ஈசனே எமையாளும் தில்லை

நடராஜனே சிவகாமி நேசனே

🙏🙏🙏🙏🙏🪷🪷🪷🪷

[14:19, 15/05/2025] Radha singaperumal Gayathri: தலம் தோரும் எழுந்தருளும்

தயாவான தான்தோன்றி நாதனே

தானெனும் ஆட்கொல்லி வசமாகி

தரணியிலுனை மறந்த எனக்கு

தாளிணை உந்தனது எந்தன் 

தலைமேல் வைத்து திருவடி தீட்சை

தந்தருள தடை யேது கண்டாய்

ஈசனே எமையாளும் தில்லை

நடராஜனே சிமகாமி நேசனே

[14:19, 15/05/2025] Radha singaperumal Gayathri: எடுத்த பாதம் தனை காட்டி

கொடு வினைதனை அறுக்க

தடையேது கண்டாய் அத்தனே

சடை மீது பிறை சூடிய பித்தனே

நடையும் தளர்ந்து வாய் குளறி 

பண்ணிசைத்து பாட இயலாது

கண்கள் காண மறுக்கும் வேளை

காத்தருளாயோ கயிலை நாதனே

ஈசனே எமையாளும் தில்லை

நடராஜனே சிவகாமி நேசனே

🙏🙏🙏🙏🙏🪷🪷🪷🪷

[14:19, 15/05/2025] Radha singaperumal Gayathri: சிந்தை எனதில் நிற்காத உன்

விந்தைதனை என் சொல்வேன்

தந்தை சிவனே உனக்கு ஆட்படாது

சந்தையில் சுற்றும் நாய் போல்

உந்தனை உணராது சுற்றுமென்

பந்த பாசமதனை களைவாய்

ஈசனே எமையாளும் தில்லை

நடராஜனே சிவகாமி நேசனே

🙏🙏🙏🙏🙏🪷🪷🪷🪷

[14:19, 15/05/2025] Radha singaperumal Gayathri: சுந்தரருக்கு சொல்லெடுத்து 

கொடுத்தவனும் நீ அதன்

பொருளும் நீ சொல்லில் அடங்கா

வித்தகனும் அத்தனும் நீ 

மணிவாசகர் திருப்பாவை 

கேட்டு  உளம் மகிழ கோவை

பாட வைத்த பரம் பொருளே இங்கு

எம்மையும் ஆண்டு கொண்டு 

எம்மையும்  பாட அருள ஏது தடை கண்டாய் ஐய்யனே

ஈசனே எமையாளும் தில்லை

நடராஜனே சிவகாமி நேசனே

🙏🙏🙏🙏🙏🪷🪷🪷🪷

[14:19, 15/05/2025] Radha singaperumal Gayathri: உடுக்கை ஒலியெழுப்பி எனை

உற்கத்திலிருந்து விழித்தெழு

செய்தும் விழித்திலேன் ஐய்யனே

விழித்தும் தொழுதிலேன் வீணே

வெம் செயல் புரிந்தேனை பரிந்து

ஆட்கொள வேண்டி ஆலயமதில்

,எழுந்தருளிய கருணை தனை

இயம்புவது எங்கனமே அறியேன் 

 கருணைக்கடலே கயிலை வாழ்

ஈசனே எமையாளும் தில்லை

நடராஜனே சிவகாமி நேசனே

🙏🙏🙏🙏🪷🪷🪷🪷🪷

[14:19, 15/05/2025] Radha singaperumal Gayathri: நெற்றியில் நின் வெண்ணீறும்

நாவில் நமச்சிவாய  நாமமும்

கண்டத்தில் ருத்திராட்சம் சிவனே!

நின் சின்னத்தைப் தரித்தும் என்

அகம் குழைய மறுக்கும் நிலையில்

காதலாகி கண்ணீர் மல்கி கசிந்துருகி

பாடிலேன், மெய்யடியார் போல்

ஆடிலேன் கல்லான நெஞ்சமதை

கனிய வைப்பதும் நின் செயலன்றி

வேரெவர் செயலாகாது கேளாய்

ஈசனே எமையாளும் தில்லை

நடராஜனே சிவகாமி நேசனே  

 🙏 🙏🙏🙏🙏🪷🪷🪷

[14:19, 15/05/2025] Radha singaperumal Gayathri: வாழ்த்தாத இந் நாவை உன்

வசமாக்கி நின்னடியாரையே

வணங்க வைத்து எந்தன் முன்

வினையறுத்து உன்னையே

வந்தித்துப் போற்றி ஆடிப் பாட

வேண்டத்தக்கதையே தரும்

வேடுவனே பிறவா வரம் அருளே

ஈசனே எமையாளும் தில்லை

நடராஜனே சிவகாமி நேசனே

🙏🙏🙏🙏🙏🪷🪷🪷🪷

[14:19, 15/05/2025] Radha singaperumal Gayathri: படைத்தும் பேணிக் காக்குமுனை

மறக்க மனமதை தந்தவனும் நீ

மாயா உலகில் உழல விட்டெனை

வேடிக்கை காண்பவனும் நீயே

கடியெமன் வரும் வரை உனை 

கணப் பொழுதும் நினையாது

காலத்தைக் கழிக்கும் எனக்கு

எப்பிறவி வருமென அறியேன்

அஞ்சியே பற்றினேன் தாளிணை

அஞ்செழுத்தை நெஞ்மதில் நீங்கா

வண்ணம் அருள்வாய் இக்கணமே

ஈசனே எமையாளும் தில்லை 

நடராஜனே சிவகாமி நேசனே

🙏🙏🙏🙏🙏🪷🪷🪷🪷

[14:19, 15/05/2025] Radha singaperumal Gayathri: நினைவினை நின் நினைவில்

நிறுத்த எண்ணியும் இயலாது

நிற்கிறேன் செய்வதறியாது இனி

நிலவுலாவும் நிர்மல வேணியனே

நின்னடியார் நிழலில்  வைத்திடாயோ

ஈசனே எமையாளும் தில்லை

நடராஜனே சிவகாமி நேசனே

🙏🙏🙏🙏🪷🪷🪷🪷🪷

[14:19, 15/05/2025] Radha singaperumal Gayathri: விண்ணுளர் போற்றும் வித்தகனே

மண்ணில் நல்ல வண்ணம் வாழ

கண்ணால் உனைக்கண்டு 

வாயால் யுனை நானும்  நற்றமிழில் பாட எந்தனுக்கு

வரமருளாயோ முத்தமிழ் முதல்வா 

யான் கூறும் சொற்களை

குறை காணாது ஏற்பாய் அய்யனே

ஈசனே எமையாளும் தில்லை 

நடராஜனே சிவகாமி நேசனே

🙏🙏🙏🙏🪷🪷🪷🪷🪷

[14:19, 15/05/2025] Radha singaperumal Gayathri: மண்ணி லெழுந்தருளி அடியார்

பின் செல்லும் பித்தனே அத்தனே

உனது மகிமைதனை யாரறிவார்

எப்பிறவி எடுத்திடினும் எத்தை

மறக்கினும் வரமது தந்தருளுவாய்

மறவாதிருக்க நின் நாமம் தனை

ஈசனே எமையாளும் தில்லை

நடராஜனே சிவகாமி நேசனே

🙏🙏🙏🙏🪷🪷🪷🪷🪷

[14:19, 15/05/2025] Radha singaperumal Gayathri: கூற்றுவனின் கூத்தினைக் 

கண்டும் கலங்காத கல்லாய்

கிடந்த என் மனதினுள் புகுந்து

மடை மாற்றம் செய்திட உனை

அன்றி எவருண்டோ விரி சடை

 தனில் மிளிர் பிறை தரித்தவா

அற நெறி வாழ் அடியார் இல்லை

இவனென தள்ளாது எனையும்

ஆண்டு கொள்ளே ஆடலரசே

ஈசனே எமையாளும் தில்லை

நடராஜனே சிவகாமி நேசனே

🙏🙏🙏🙏🙏🪷🪷🪷🪷

[14:19, 15/05/2025] Radha singaperumal Gayathri: மாணிக்க விளக்கேயானாலும்

ஒளியற்ற நிலை போல் என்னுள்

நீ நிலை கொள்ளாது காரிருளில்

கட்டுண்டு பிறந்து இறந்து யேது

பேறும் கண்டிலேன் ஆடலரசே!

இங்கெனை கருணையாலெனை

ஆண்டு கொள்ளே ஐய்யனே 

உனையன்றி வேறெ வருமுண்டோ

ஈசனே எமையாளும் தில்லை

நடராஜனே சிவகாமி நேசனே

🙏🙏🙏🙏🙏🪷🪷🪷🪷

[14:19, 15/05/2025] Radha singaperumal Gayathri: எண்ணிலடங்கா பிறவிதனில்

நானிழைத்த பிழையும் இங்கு

எண்ணத்தகுமோ யாரறிவார் 

விண்ணவர் போற்றும் வேதியனே

மண்ணுலகில் மானுடலளித்த முக்

கண்ணா! உனையடையும் வழிதனை எனக்கறிவித்து

எனையாண்டருளே

ஈசனே எமையாளும் தில்லை

நடராஜனே சிவகாமி நேசனே

🙏🙏🙏🙏🙏🪷🪷🪷🪷

[14:19, 15/05/2025] Radha singaperumal Gayathri: காரணங்கள் பலவுண்டாம்

கர்மங்களைச் செய்தேனுக்கு

தரும வழி பல தந்தே எந்தன்

கட்டுண்ட கருமமதை அழித்திட

தலம்தோரும் எழுந்தருளி தரும

கதைகள் பல புனைந்த நின்

கருணைதனை யறிந்திலேனை

காத்தருளுவது இனி எங்கனமே

ஈசனே எமையாளும் தில்லை

நடராஜனே சிவகாமி நேசனே

🙏🙏🙏🙏🪷🪷🪷🪷🪷

[14:19, 15/05/2025] Radha singaperumal Gayathri: அடங்கா மனத்தின் வசமாகி

அறத்தினை மறந்து செய்யா

செயல் புரிந்து போக்கிடமின்றி

கிடப்பேனை காப்பதுன் கடமை

என மறந்தினையோ போக்கும் வரவுமிலா புண்ணியனே 

அருணை மா நகருளானே உன் கருணை மழை பொழிய கருமமுமெனது அழியுமே

ஈசனே எமையாளும் தில்லை

நடராஜனே சீவகாமி நேசனே

🙏🙏🙏🙏🪷🪷🪷🪷🪷

[14:19, 15/05/2025] Radha singaperumal Gayathri: பித்தனென்றும் பேயனென்றும் 

அத்தா யுனை அழைத்தாலும்

பெத்தவளைப் போல் அணைத்து

ஞானப்பாலினை ஊட்டு மய்யனே

ஈனனெனக்கருள ஏது தடையோ  

ஈங்கோய் மலையில் அருளும் 

ஈசனே எமையாளும் தில்லை

நடராஜனே சிவகாமி நேசனே

🙏🙏🙏🙏🙏🪷🪷🪷🪷

[14:19, 15/05/2025] Radha singaperumal Gayathri: அறிவாலுனை அறிவேன் என

அறிய முற்பட்டு தோற்று இன்று

அறிவது அரிதென அறிந்தேன்

அறிந்தபின் உனை உணர்வதே 

அறிவாகுமென அறிந்தயெனக்கு

அரிதான உணர்வுதனை தாராயோ

ஈசனே எமையாளும் தில்லை

நடராஜனே சிவகாமி நேசனே

🙏🙏🙏🙏🙏🪷🪷🪷🪷

[14:19, 15/05/2025] Radha singaperumal Gayathri: மறை நான்கினுள் மறைந்த

இறையுனை உணரா என்னிடம்

குறை காண்பது உனக்கழகோ

நிறை மொழி மாந்தர் யாவரும்

பறை சாற்றும் பரனே அவர் தம்

உரை வழி கேட்டுமுணரா எனை

கரை சேர்க்க தடையேது கண்டாய்

ஈசனே எமையாளும் தில்லை 

நடராஜனே சிவகாமி நேசனே

[14:19, 15/05/2025] Radha singaperumal Gayathri: ஊத்தை உடலைப் பேணவே

அத்தனுனை மறந்து திரிந்து 

முக்தி வழியறியா மூர்கனுக்கு

புத்தியிலுறையுமாறு வழிதனை

ஏத்தியருள ஏது தடை கண்டாய் 

பக்தனென எனை ஏற்றருளுகவே

ஈசனே எமையாளும் தில்லை

நடராஜனே சிவகாமி நேசனே

🙏🙏🙏🙏🪷🪷🪷🪷

[14:19, 15/05/2025] Radha singaperumal Gayathri: வினைன்றினையே அறிந்தேனை

வினையறுக்க உனையல்லாது

வேரெவருண்டோ யானறியேன்

உன் திரு அருள் வெள்ளமதில்

அழுத்தி இனியும் வினை புரியா

வண்ணம் அருள தடையாதோ

ஈசனே எமையாளும் தில்லை

நடராஜனே சிவகாமி நேசனே  

🙏🙏🙏🙏🙏🪷🪷🪷🪷

[14:19, 15/05/2025] Radha singaperumal Gayathri: இன்பத்தினை நாடியே ஓடும்

இம் மனதினை நின் பால் ஈர்த்து

நின் பொன்னடியின் கீழ் வைத்து

பிறவித் தளை நீக்க முயன்றும்

ஆறு கோடி மாயா சக்திகளின்

வசப்பட்டேனை  கரை சேர்க்கும்

வல்லாரைக் கண்டிலேன் அய்யனே

பொல்லா வினையேனை தள்ளாது

பொன்னம்பலனே காத்தருளகவே

ஈசனே எம்யாளும் தில்லை

நடராஜனே சிவகாமி நேசனே

🙏🙏🙏🙏🪷🪷🪷🪷🪷

[14:19, 15/05/2025] Radha singaperumal Gayathri: அடியார் பலர் உனை உணர்ந்து

ஆடியும் பாடியும்  உனை ஏத்த 

மலமூன்றின் வசமாகி தொடர்ந்து

பொல்லா வினை புரிந்த எந்தன்

எல்லா பிழையும் பொருத்தருள

வேண்டி உன்னடி சேர்ந்தேனுக்கு ஈண்டிங்கு பிறவாமை தந்தருளே

ஈசனே எமையாளும் தில்லை

நடராஜனே சிவகாமி நேசனே

🙏🙏🙏🙏🙏🪷🪷🪷🪷

[14:19, 15/05/2025] Radha singaperumal Gayathri: இடி யென வாழ்வில் இறங்கும்

அடியார் படும் அல்லல்தனை

நொடிப் பொழுதில் நீக்கி உனைப்

படியாருக்கும் படியளக்கும் பரமா

துடியிடை இள மங்கை மணவாளா

கடி யமன் வருமுன் எனக்கருளே 

ஈசனே எமையாளும் தில்லை

நடராஜனே சிவகாமி நேசனே

🙏🙏🙏🙏🪷🪷🪷🪷🪷

[14:19, 15/05/2025] Radha singaperumal Gayathri: ஊரார் புகழ வாழ்ந்தென்ன பயன்

உற்றார் புகழ் பெற்று ஏது பயன்

உனை அறியும் அறிவு இல்லாது

உண்டிக்கே வாழ்ந்தேது பயன்

உனை கண்டவரைக் கண்டிலேன்

உத்திரகோச வாழ் ஈசனே 

உண்மைப் பொருளுணர்ந்து 

உனைப் போற்றி வாழ அருளாயோ

ஈசனே எமையாளும் தில்லை

நடராஜனே சிவகாமி நேசனே

[14:19, 15/05/2025] Radha singaperumal Gayathri: சிறியேன் புரிந்த வினையினை 

சிந்தையில் கொள்ளாது ஆங்கே

நித்தமொரு திருவிளையாடலை

நிகழ்த்தி மெய்யறிவைப் புகட்டி

எமையாட்கொள்ள வரும் அய்யனே

இமைப் பொழுதும் என் நெஞ்சில்

நீங்கா நின் நினைவினைத் தாராயோ

ஈசனே எமையாளும் தில்லை

நடராஜனே சிவகாமி நேசனே

🙏🙏🙏🙏🪷🪷🪷🪷

[14:19, 15/05/2025] Radha singaperumal Gayathri: பேரும் புகழும் வேண்டி வினைப்

புரிந்து திரிந்து வந்து நின்னடியார்

நாமத்தை செப்புவது போல யான் 

நாவினால் நவின்றது  மணமற்ற

மலரென கண்டு கொண்டு தள்ளத்

தகுமோ தன்னிகரில்லா தற்பரனே 

உனையறிய முற்பட்டனெக்கு என்

உட் புகுந்து பாவியேனெக்குமருள

உமை பங்கா தடையேது கண்டாய்

ஈசனே எமையாளும் தில்லை

நடராஜனே சிவகாமி நேசனே

🙏🙏🙏🙏🙏🪷🪷🪷🪷

[14:19, 15/05/2025] Radha singaperumal Gayathri: மேவிய நின் நாமத்தைச் செப்பி

சேவித் தொழுது  கண்ணீர் மல்கி 

கசிந்துருகி அகம் குழையாது 

நசிந்து வாழும் எமைக் காக்கவே

விண்ணுலகம் விடுத்து வந்தது

மண்ணுலகம் செய்த பாக்கியமே

கண்ணுக்கு கண்ணாய் விளங்கும்

ஈசனே எமையாளும் தில்லை நடராஜனே சிவகாமி நேசனே

🙏🙏🙏🙏🪷🪷🪷🪷🪷

[14:19, 15/05/2025] Radha singaperumal Gayathri: தொழும் வழி யறியா யெனக்கு

அழுதாலுனைப் பெறலாமென 

அறிந்து முற்பட்டு கசியா யென்

உள நிலை கண்டு யெனக்கருள தலம் தோறும் தென் முகனாக எழுந்தருளி தொழும் வழிதனை

உபதேசிக்க வந்த தேவிகா! உன் கருணையை செப்புவது எங்கனமே

ஈசனே எமையாளும் தில்லை

நடராஜனே சிவகாமி நேசனே

🙏🙏🙏🙏🪷🪷🪷🪷

[14:19, 15/05/2025] Radha singaperumal Gayathri: ஓங்காரமாய் எங்கும் எழுந்தருளிய   

ஓங்காரத்தினுட் பொருளே உனையறிய நின்னருள் இன்றி வழியேதுமறியேன் அய்யா

உணர்வாயிருந்து முனை அறிய

வைப்பதும் உன் கடமையன்றோ  

உணர்விலா உலர் கட்டையென

உதறித் தள்ளுவது உனக்கழகோ 

ஈசனே எமையாளும் தில்லை

நடராஜனே சிவகாமி நேசனே

🙏🙏🙏🙏🙏🪷🪷🪷🪷

[14:19, 15/05/2025] Radha singaperumal Gayathri: புலனைந்தும் தன் வழி காணாது

பொன்னார் மேனி தனைக் காட்டி 

பிறை சூடிய செஞ்சடையுமாடிட

நஞ்சுடை நாகமும் ஆடிட நங்கை

சிவகாமியுடன் ஆடும் கோலமதை

கண்டு களிக்க எந்நாளும் எனக்கு

அருளி எந்தனைக் கத்திடாயோ

ஈசனே எமையாளும் தில்லை

நடராஜனே சிவகாமி நேசனே

🙏🙏🙏🙏🙏🪷🪷🪷🪷

Comments