நாள் தோறும் சிவனின் நினைவில் சிவன் தாமரைத் திருவடிக்கு – சில வரிப் பாமாலை
பாமாலை: 1 வினையறுக்கும் வித்தகனே தொழ வரும் எனை தொடரும் என் வினை தனை என் சொல்ல வினையினை வித்திடும் சமயம் வேதியனே தடுத்தாட் கொள்ள தடையேது கண்டாய் இனியவனே விடையேறி இக் கணமே வாராய் ஈசனே எமையாளும் தில்லை நடராஜனே சிவகாமி நேசனே பாமாலை 2: பிறவியறுக்கும் வழி அறிந்தும் போற்றி உனை தொழுதிலேன் புல்லார் பலர் தம் சொல் கேட்டே செல்லா வழிச் சென்று வீழ்ந்தேன் பொல்லா வழியில் பொருளீட்டிய புலையேனேன் எனக்கு சிவபதம் அளிக்க வாராயோ சிதம்பரனே ஈசனே எமையாளும் தில்லை நடராஜனே சிவகாமி நேசனே பாமாலை 3 வையத்தில் வாழுங்கால் உனை வாயினால் பாடி வாழ்த்திலேன் கண்ணால் நின் பொன்னுருவம் கண்டும் கருத்தில் நிருத்திலேன் ஐங்கருவியும் ஒடுங்கும் நேரம் ஐய்யனே உனை நினைக்கிலேன் காலனின் காலடி ஓசை கேட்டு இக் கணம் எனைக் காப்பது எவரோ பாமாலை 4 மாலயனும் அறியா வொட்டா மாதொரு பாகன் உனை யறிய மாதவமியற்றியும் பயனேது மனமதை செம்மையாக்கி நின் மலரடியில் பதித்து சித்தத்தை மலராக்கி அர்ச்சித்து வழிபட மனமிரங்கி நீ எனக்கருளாயோ பாமாலை 5 கடலைக் குடைந்து கண்டதும் வானைத் துழைத்துக் கண்டதும் மலைமுகட்டை எட்டி நின்றதும...